செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
தோழனின் திருமணம்
சேக் ஒரு குழந்தை அவனுக்கு திருமணமா என ஒரே ஆச்சர்யம் !
திருமணம் முடிவானவுடன் சேக்குடன் பேசுவதற்கு சாரா நவ்ஸத் (மணப்பெண் )கைப்பேசி எண்ணை தம்பி மூலம் கேட்டு அனுப்பியதாகவும் , அவ்வாறு பேசுவது தவறு என சேக் எண்ணை தர மறுத்ததாகவும் கேள்விப்பட்டேன் .வாழ்த்துக்கள் .
சொன்ன நேரத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்து என்னை மாட்டுத்தாவணி என்னும் சுற்றுலா மையத்தை சுற்றிப் பார்க்க வைத்த பாலாஜிக்கு நன்றி .
நானும் , பாலாஜியும் விழுப்புரத்திற்கு அதிகாலை மூன்று மணிக்கே சென்று விட்டோம் .மண்டபத்தின் வாசலில் Flex Board இல் சிரித்தபடி சேக் அப்துல்லா . திருமண மண்டபத்திற்கு சொந்தமான Hotel இல் தங்கினோம் .
விழுப்புரத்தில் அறை எடுத்து தங்கலாம் என கிளம்பி வந்து கடலூரில் பேருந்து கிடைக்காமல் , அங்கேயே தங்கி விட்டனர் அனந்த கிருஷ்ணனும் , சிதம்பரமும் .
சிதம்பரம் வரும் வழியிலே கால் கட்டை விரல் நகத்தை பெயர்த்துக் கொண்டு வந்திருந்தான் .அதை வெட்டி எடுக்க முயற்சி செய்தான் .
சரவணகுமார் , செந்தில் குமார் , விஜயகுமார்சென்னையில் இருந்து திருமணத்திற்கு ரயிலில் வந்து கொண்டு இருந்தனர் . பாய் வீட்டு பிரியாணி சாப்பிடுவதற்காக மூன்று நாட்கள் வயிற்றை காயப்போட்ட செந்தில் குமார் குறிப்பிடத்தக்கவர் . UR Coach இல் பில் கேட்ஸ் பேரன் போல் ஆடையணிந்து வந்து அனைவர் கவனத்தையும் ஈர்த்த விஜயகுமாரும் குறிப்பிடத்தக்கவர் .
இதே நேரத்தில் வேறு வேறு திசைகளில் இருந்து புயலாய் புறப்பட்டுவந்து கொண்டிருந்தனர் ஜெயக்குமார் , ராஜ்குமார் , சங்கர் . Industrial Safety , Mepco வில் கிடைக்க வேண்டும் என்பதற்காக TANCET ஒழுங்காக படிக்காமல் திருப்பதி , பழனி என வரிசையாக மொட்டை அடித்துக் கொண்டு இருக்கும் ஜெயக்குமாரின் முயற்சி பாராட்டத்தக்கது .
திருமண மண்டபத்தில் சேக்குடன் பணிபுரிந்தவர்கள் பலர் தென்பட்டனர் . முன் தினமே அவர்கள் அனைவரும் ஓசி சரக்கு வாங்கி குடித்து விட்டு Half Boil போட்டதாக கேள்விப்பட்டோம் . சந்தன நிற தலைப்பாகை அணிந்த சேக் குறுநில மன்னன் போல காட்சியளித்தான் . மணப்பெண்ணை எங்குமே எங்களால் பார்க்கமுடியவில்லை . அவருக்கு சடங்குகள் தனியாக நடக்குமாம் .
நாங்கள் : என்ன ஷேக்கு பொண்ண கண்ணுலயே காட்ட மாட்டேங்குற ?
சேக்: ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்ட நானே இன்னும் பாக்கல . . .
(புகைப்படத்தில் மட்டும் பார்த்து விட்டு திருமணம் செய்து கொண்டான் )
வழக்கம் போல திருமண வீட்டில் வளைத்து வளைத்து சைட் அடித்த செந்தில் , 'ஆட்டுக்கு பதிலா ஒன்ன பிரியாணி போட்டுற போறாங்க !' என்றவுடன் தான் அடங்கினான் .
சேக்கின் கையில் மெஹந்தி போட்டு அதில் சேக், சாரா என எழுதப்பட்டு இருந்தது .
பந்தியில் இடம் பிடிக்க அனைவரும் படாதபாடு பட்டோம் . எங்களுக்கு முன்பே தனியாக சென்று அமர்ந்து மட்டன் பிரியாணியை லெக் பீசுடன் சாப்பிட்டு விட்டு எங்களுக்கு வெறும் குஸ்கா மட்டும் கிடைக்க காரணமாக இருந்த ஜெயக்குமாரின் சாமர்த்தியத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை .
திட்டமிட்டபடி செந்தில் பாத்தி கட்டி அடித்தான் . ஜீன்ஸ் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது அவனுக்கு வருத்தம் . வேஷ்டியில் வந்திருந்தால் இன்னும் இரண்டு ரவுண்ட் சாப்பிட்டு இருப்பான் .
ராஜ்குமாரும் , ஆனந்தும் சைவம் சாப்பிடுபவர்கள் என்பதால் ஹோட்டலுக்கு சென்று விட்டனர் .
மணப்பெண்ணின் கல்லூரித் தோழிகள் என நினைக்கிறேன் . கலையான கண்மணிகள் . எதையாவது ஒப்பேற்றி விட வேண்டும் என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் சுற்றி சுற்றி வந்த செந்தில் , விஜயகுமாரை பார்த்து ' but , ஒங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு !' என நீங்கள் பாராட்ட வேண்டும் .
ஒருவழியாக பெண்ணை அழைத்து வந்தனர் . நாங்கள் விடைபெறுவதற்காக மேடைக்கு சென்றோம் .புகைப்படம் எடுப்பதற்காக நாங்கள் அனைவரும் சேக்கின் அருகில் நின்று கொண்டிருந்தோம் . செந்தில் மணப்பெண்ணுக்கு அருகிலும் , அதற்கடுத்து சங்கரும் நின்று கொண்டிருந்தனர் .
' கவர் பண்ண முடியல பொண்ண ஒட்டி நில்லுங்க !' என Photographer செந்திலை பார்த்து சிரித்துக்கொண்டே சொல்ல , அவனும் ,சங்கரும் நகர்ந்தனர் . 'பொண்ணு பக்கத்துல யாரும் நிக்க கூடாது ' என எங்களுக்கு பின்னால் இருந்து ஒரு அம்மா கதற . அதை கேட்காமல் மறுபடியும் Photographer நகர சொல்ல , அந்த அம்மா கதற ..முகத்தை ஒருவிதமாய் வைத்துக்கொண்டு நகர்ந்தான் செந்தில் . அவனுடன் சேர்ந்து செந்திலை பார்த்து தலையில் அடித்துக்கொண்டே நகர்ந்தான் சங்கர் .
இந்தப்பக்கம் நின்று கொண்டிருந்த சிதம்பரம்
'டேய் தள்ளுடா என்ன மறைக்காத !'
என்று யாரிடமோ சொல்லிக்கொண்டு இருந்தான் . யார் அது என எட்டிப் பார்த்தால் , எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான் .
இதற்கிடையே ஒரு குரல் ''போட்டோ எடுக்குறது தான் எடுக்குறீங்க ! வெள்ளையா எடுங்க !"
மற்றொரு குரல் "இருக்குறது தான் வரும் ! மூடீட்டு நில்லுடா !"
படம் எடுக்கும் பொது என் காலில் சுருக்க் என ஏதோ செய்தது . என்னவென்று திரும்பிப் பார்த்தால் அந்த எட்டு வயது சிறுவன் 'ஹீ ஹீ ஹீ ! 'என சிரித்தான் .
கிள்ளி வைத்திருக்கிறான் .
சில வினாடிகள் கழித்து 'ஆ ......' என சத்தம் . இம்முறை கத்தியது சரவணகுமார் . காரணம் - அதே சிறுவன் .
வளைத்து வளைத்து அனைவரையும் கிள்ளி வைத்திருக்கிறான் .
-----
திருமணம் முடிந்து எங்கள் அறைக்கு சென்றோம் . இருவருக்கு மட்டும் என சொல்லி இருந்தோம் . அந்த அறைக்கு பத்து பேர் சென்றோம் .
சிதம்பரம் நகத்தை எடுக்க முயற்சி செய்கிறான் .
டிவி பார்த்தோம் , சிரித்துப் பேசினோம் . விழுப்புரத்தில் நடந்த திருமணத்திற்கு சென்னையில் இருந்த பலர் வராததை எண்ணி வருந்தினோம் .
சிதம்பரம் நகத்தை எடுக்க முயற்சி செய்கிறான் .
சங்கர் விஜய் டிவியின் பாய்ஸ் அண்ட் கேள்ஸ் பார்க்கலாம் என்றான் . ராஜ்குமார் கார்ட்டூன் நெட்வொர்க் தான் பார்க்க வேண்டும் என அடம் பிடித்தான் (குழந்தைத்தனம் மாறாமல் இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் ). பாலாஜி Sony Pix il போடப்பட்ட தான் பார்த்த ஒரே ஆங்கிலப்படமான Vin Diesel in xXx தான் பார்க்க வேண்டும் என்றான் . xXx என்றால் வேறு விதமான படம் என நாக்கை தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தான் செந்தில் .
சிதம்பரம் நகத்தை எடுக்க முயற்சி செய்கிறான் .
சுற்றுலா செல்ல திட்டமிட்டோம் .
(செப்டம்பர் 14 பாலாஜியின் பிறந்தநாள் . அதனால் அனைவரையும் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளான் . இடம் ஊட்டி . நாள் sep 12,13 (Sat nd Sun).
கோவையில் இருந்து அனைவரும் பாலாஜியின் வேனில் செல்லலாம் . நம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வர வேண்டும் . மேலும் தகவல்களுக்கு என்னையோ ,பாலாஜி,அனந்த கிருஷ்ணன் , விஜயகுமார் , செந்தில் ஆகியோர்களையோ தொடர்பு கொள்ளுங்கள் . மற்ற கல்லூரி மாணவர்கள் ஏதேதோ செய்கின்றனர். நாம் இந்த சுற்றுலாவுக்காவது செல்லலாம் .)
சிதம்பரம் நகத்தை எடுக்க முயற்சி செய்கிறான் .
இன்னும் பல விசயங்களை பற்றி நகைச்சுவையாக பேசுகிறோம் .
இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிதம்பரம் நகத்தை வெட்டி எடுக்கிறான் . அனைவரும் கை தட்டினோம் .
அவசரமாய் செல்ல வேண்டும் என்றதால் சரவணா , சங்கர் , ஜெயகுமார் , ராஜை வழியனுப்பி வைத்தோம் .
-----
சிதம்பரம் பீர் அடிப்பதாகவும், பல்சர் வாங்கியிருப்பதாகவும் AK கூறியதால் அவனை மொட்டை அடிக்க ஹோட்டலுக்கு பக்கத்தில் இருந்த பிரின்ஸ் பாருக்கு அழைத்து சென்றோம். நானும் , AK வும் சரக்கடிக்க மாட்டோம் என்பதால் பெப்ஸியுடன் முடித்துக் கொண்டோம் . முக்கால் பாட்டில் பீர் அடித்து விட்டு சிதம்பரம் செய்த அலும்பு தாங்க முடியவில்லை . நாலு தட்டு மிச்சர் சாப்பிட்டான் . செந்தில் ஒரு கவர்ச்சியான அழகியின் படத்தை (பாரில் ஒட்டப்பட்டு இருந்தது ) காட்டி 'அவ என்ன பாத்து சிரிக்குராடா' என்றான் . கண்ணில் லேசர் சிகிச்சை செய்யப்பட்டதால் பாலாஜி ஹாட் அடிக்க முடியாது . எனவே அவனுக்கு துணையாக விஜய்யும் பீரே அடித்தான் .(என்ன ஒரு நட்பு !)
இருவருக்கும் பீரே பிடிக்காது என்பது கொசுறு தகவல் .
பல்வேறு வகையில் உடல் நலத்தை பாதிக்கும் என்பதால் இந்த பழக்கத்தை கைவிடும்படி பாசத்துடன் நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன் .
அடுத்த நண்பனின் திருமணத்திற்கு பலர் வரவேண்டும் என்பதே என் ஆசை .
-----
மணமக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ அன்புடன் வாழ்த்தும் - 67 உள்ளங்கள் (2007 Mepco EEE )
-----
இன்றுடன் நான் இணையத்தில் எழுதத்துவங்கி ஒரு வருடம் நிறைவு பெறுகிறது .தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் நன்றி !
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
கல்பனாவின் தாத்தா - சிறுகதை
நான் ரகு நானும் அவளும் காதலிக்கிறோம் .என் கூட தான் வேல பாக்குறா !. நான் clerk அவ receptionist. இந்த கதைய எழுதுறவன் சரியான சோம்பேறி . அதான் என்ன அப்பா , அம்மா இல்லாத ஒருத்தனா காட்டுறான் . கல்பனாவுக்கு தாத்தா மட்டும் . ஏன்னா கதையே அத வச்சு தான் . அவருக்கு எம்பது வயசு .அவருக்கு என்ன பிடிச்சா தான் எங்களுக்கு கல்யாணம் . இன்னிக்கு தான் அவர போய் நேர்ல பாக்க போறேன் . அவர் ரொம்ப வித்தியாசமானவர் அப்டீன்னு சொல்றா ! அவர எங்க காலேஜ் வாத்தி ஒருத்தரோட compare பண்ணி சொல்லுவா . அந்த வாத்திய பத்தி ஒரு வரி . நாப்பது வயசான அவரு மட்டும் ஒரு jew வா இருந்தா ஹிட்லர் படத்துக்கு மாலை போட்டு கும்புடுவார் . நாப்பதே அப்டீன்னா எம்பது எப்டியோ ?
-----
அழைப்புமணியை அழுத்த உள்ளே larger than life ஒலிக்கிறது .
கடிகாரத்தை இடது கையில் இருந்து கழட்டி வலதுக்கு மாற்றுகிறான் .
கல்பனா கதவை திறக்கிறாள் .
"என்ன பெல் அடிச்சா இந்த பாட்டு வருது ! தாத்தா ஒன்னும் சொல்ல மாட்டாரா? "
"இத வெச்சதே அவரு தான் !"
"ஹோ ஹோ !"
"அதென்ன ஹோ ஹோ ?"
"வித்யாசமான ஒங்க தாத்தாவுக்காக oh ho க்கு பதிலா ஹோ ஹோ !"
"ஹோ ஹோ !"
உள்ளே நுழைந்தவுடன் ரோஸ் நிற மூக்குடன் வாலாட்டுகிறான் வெள்ளை நிற ராஜபாளையம் கோவிந்தராஜன் .
"ஒன்னோட மூஞ்சிய அது கிட்ட காட்டுனேன் . அதான் வாலாட்டுது !"
-----
தாத்தா வருகிறார் .
தலை முழுவதும் வழுக்கை .
மீசை இல்லை .
சிவந்த நிறம் .
ஒல்லியான தேகம் .
கண்ணாடி கிடையாது .
v neck shirt, tracksuit.
shirt இல் தமிழில் உள்ள வாசகம் - பெண்கள் எப்போதுமே தெளிவானவர்கள் . அதை தெரிந்து கொள்ளாமலேயே பல ஆண்கள் இறந்து விடுகிறார்கள் .
"Welcome ragu! " கம்பீரமான குரலுக்கு கொஞ்சம் குறைவு .
"என்ன வலது கைல watch?"
"கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான் சார் !"
'அப்டியா ' என்றபடியே தன் Pocket கடிகாரத்தை எடுக்கிறார் .
"இது தான் வித்தியாசம் ! அது இல்ல !"
"இல்ல சார் ! அது ஒரு டைப் வித்தியாசம் . இது ஒரு டைப் வித்தியாசம் . ரெண்டு வித்தியாசத்துக்கும் வித்தியாசம் இருக்குது சார் . அந்த வித்தியாசம் ஒங்களுக்கு புரியுதா ?"
தாத்தா ஒரு மாதிரி பார்க்கிறார் .
கல்பனா இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாதது போல் அமர்ந்து கொண்டு கண்ணாடி தொட்டியிலுள்ள மீன்களுக்கு புழுக்களை போடுகிறாள் . அவளருகில் அமர்ந்து கொண்டு மீன்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்க்கிறான் கோவிந்தராஜன் .
பொதுவான விஷயங்கள் அதாவது அரசாங்கம் கொசு மருந்து என்ற பெயரில் மனிதர்களை துன்புறுத்துவது , அற்புதபவனில் இட்லிக்கு வெங்காய சட்னி தர மறுப்பது , அரைகுறை ஆடையுடன் ஆடி விட்டு 'நான் நல்லா நடிச்சுருக்குது !' என சொல்லும் நடிகை, பற்றி என ஒரு முப்பத்தியேழு நிமிடங்கள் பேசுகிறார்கள் .
"ஒங்க கதையெல்லாம் கல்பனா சொன்னா ! அவளுக்கு நிம்மதியான வாழ்க்கை தர என்ன பண்ணுவீங்க ?"
"அவள சிரிக்க வைக்க தெரியாட்டாலும் அழவிடாம பாத்துப்பேன் சார் !"
"சினிமா வசனம் மாதிரி இருக்கு !"
"இல்ல சார் ! இது நானே சொந்தமா எழுதுனது சார் ?"
"என்னது ?"
"இல்ல இது நானே பேசுனது ! ஐயோ அத வுடுங்க சார் ! நாம வேற ஏதாவது பேசலாம் !"
ரகுவை ஒருமாதிரியாக பார்த்தபடியே "அவளுக்கு பிடிச்ச அஞ்சு விஷயம் என்னன்னு சொல்ல முடியுமா ?"
"கண்டிப்பா சார் !"
"ம்ம் !"
"chicken pepper fry, சேமியா ஐஸ் , பருப்பு சாதம் உருளைக்கிழங்கு சிப்ஸ் வெச்சு, chocolate milkshake, ரசகுல்லா ....ம்ம்ம்ம் இன்னும் இருக்கு சார் ! நீங்க top - 20 கேட்டா கூட நான் சொல்லுவேன் சார் !"
அமைதியாக பார்த்து முடித்து விட்டு ,
சற்று கடுமையான குரலில்
"நான் வாழ்க்கைல அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு கேட்டேன் ?"
ரகு கல்பனாவை பார்த்து ,
"அந்த சீரியல நீ பாப்பியா கல்பனா ?"
கல்பனா தலையில் அடித்துக் கொள்கிறாள் . கோவிந்தராஜன் முகத்தை திருப்பிக் கொள்கிறான் .
இன்னும் சற்று கடுமையான குரலில் ,
"ரகு நான் life ல அவளுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டேன் ?"
"life ல என்ன பிடிக்கும் ? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !"
"இது கூட தெரியாம என்ன காதல் ?"
'இதெல்லாம் இவரு கேப்பாருன்னு இவ சொல்லவே இல்லியே ' என்றபடியே அவன் யோசிக்கிறான் .
"அவளுக்கு ஒங்கள ரொம்ப பிடிக்கும் சார் !அப்புறம் ......" யோசிக்கிறான் .
"என்ன சேக்காம சொல்லுங்க !"
நினைவுகளை திருப்பிப் பார்த்து மெதுவாக சொல்ல துவங்குகிறான் .
"கூட்டமில்லாத கோவிலுக்கு போக பிடிக்கும் , பாட்டு கேட்டுக்கிட்டே வீட்ட சுத்தம் பண்ண பிடிக்கும் , அவ friends கூட சேந்துக்கிட்டு மொட்ட மாடீல அரட்டை அடிக்கப் பிடிக்கும் , மார்கழி மாச குளிர் பிடிக்கும் , அப்புறம் இந்த கோவிந்தராஜன் ! "
தன் பெயர் உச்சரிக்கப்படுவதை கேட்டு கோவிந்தராஜன் திரும்பிப்பார்க்கிறான் .
"எல்லாம் சரி இந்த லிஸ்ட்ல நீங்க இல்லியே !"
"அது வந்து சார் ......"
"என்ன கோவிந்தராஜனோட போட்டி போட முடியலையா ?"
"mm நானும் ஒங்கள மாதிரி தான் இந்த லிஸ்டுக்கு எல்லாம் மேல !"
"சரி ஒங்க entertainment என்னென்ன ?"
கல்பனா தான் என்னோட பொழுதுபோக்கே என்று நினைத்தபடியே
"அப்பப்ப சினிமா பாப்பேன் அப்புறம் basket ball!"
"basket ball?"
"ஆமா சார் !"
"ஏன் கிரிக்கெட் பிடிக்காதா ?"
தாத்தாவுக்கு கிரிக்கெட் உயிர் .ரகுவுக்கு அதன் spelling கூட தெரியாது .
"யார் சொன்னா ? என் உயிரே அது தான் !"
"எனக்கும் தான். எனக்கு ஒரு ஆங்கிலோ இந்தியன் friend இருந்தான். அவன் தான் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா மேட்ச் எல்லாம் போட்டு காட்டுவான் எல்லாம் ப்ரொஜெக்டர் ல தான் . அதெல்லாம் ஒரு காலம் ...."என ஆரம்பிக்கிறார் .
கல்பனா தாத்தாவுக்கு பின்னால் வந்து நின்று கொண்டு , காற்றில் செவ்வக வடிவத்தை வரைந்து காட்டி இணையத்தில் அவன் தேடியதை நினைவுபடுத்துகிறாள் .
"ஆமா சார் bradman ......greatman ! சும்மாவா சார் first class match ல 117 century!"
"yes! yes! அவருக்கு அப்புறம் என்ன impress பண்ணுனது லாரா தான் என்ன சொல்றீங்க ?"
'என்னத்த சொல்றது ' என நினைத்தபடியே
"ஆமா சார் ! அவரால தான் நம்ம நாட்டுக்கே பெருமை !
" தாத்தா எழுந்தபடியே "நான் முடிவு பண்ணிட்டேன்"
கல்பனா ரகுவை பார்த்து கோபத்துடன்
"என்ன ரகு ? லாரா வெஸ்ட் இண்டீஸ் !"
"அத பத்தி நீ எதுவும் சொல்லவேஇல்லியே ! சொல்லீருந்தா நான் refer பண்ணி இருப்பேன் !"
அமைதியாக பார்க்கும் தாத்தா "எனக்கு சம்மதம் !"
இன்ப அதிர்ச்சியுடன் இருவரும் பார்க்கின்றனர் .
"லாரா எந்த நாடா இருந்தா என்ன ? ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டீங்க அது போதும். பத்து படிக்கிறப்பயே பசங்க ஓடிப்போற காலம் இது . என்கிட்டே சம்மதம் வாங்க ஏதேதோ பண்றீங்க ! ஒங்கள மாதிரி நல்லா குழந்தைங்களுக்கு என்னால வேற என்ன செய்ய முடியும் ?. அப்புறம் ஒரு விஷயம் ரகு ! ஒங்க கைய பாத்தாலே தெரியுது இடது கைல தான் watch கட்டுவீங்கன்னு . அதுலயே கட்டுங்க . நீங்க நீங்களா இருங்க ! அது தான் எனக்கு பிடிக்கும்"
ரகு நெகிழ்ச்சியுடன் அவரை பார்த்து புன்னகைக்கிறான் . கை கொடுக்கிறான் "தேங்க்ஸ் சார் "
"சார் எல்லாம் வேணாம் . ஒங்க ஆபீஸ்ல எல்லாரையும் பேர் சொல்லி கூப்புடுற மாதிரியே என்னையும் கூப்புடுங்க ! "
"ஏன் ராஜேந்திரா ?" கல்பனா
"மனசளவுல நாங்கெல்லாம் youth மா! அப்புறம் கல்பனா... பின்னாடி இருந்து சைகை காட்டுறது எல்லாம் சரி. ஆனா,அதுக்கு முன்னாடி முன்னாடி கண்ணாடி இருக்கானு பாக்கணும் சரியா ?"
இருவரும் சிரிக்கின்றனர் .
"அப்புறம் இன்னொரு விசயத்துக்கு நீங்க சம்மதிச்சா தான் கல்யாணம் !"
கல்பனா , ரகு இருவரும் அதிர்ச்சியுடன்
"இது என்ன புது குண்டு?"
தாத்தா சிரித்தபடியே "நைட் இங்க தான் சாப்பிடணும் சரியா?"
-என்னால் எழுத முடிந்த இந்த மொக்கை கதையை மைக்கேல் ஜாக்ஸனுக்கு சமர்ப்பிக்கின்றேன் .
திங்கள், 13 ஜூலை, 2009
DD 543 - 08 - சிறுகதை
பெயர் மற்றும் (வயது )
ரகு (40)
கல்பனா (40)
மகள் இஷா (19)
அவள் தோழி ஜாஸ்மின், இனி ஜாஸ் (19)
மகன் நிஷாந்த், இனி நிஷா (12)
BRO 37-01 (21)
BRO 37-02 (21)
BRO 37-03 (25)
----------
வீட்டில் பெரிய திரையில் செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது !
'எங்களுக்கு வாக்களித்தால் கருணாநிதி ஆட்சியை அமைக்கப் பாடுபடுவோம் ! ' என திரையில் ஒருவன் முழங்கிக் கொண்டு இருந்தான் .
ஜாஸ் : யார் uncle கருணாநிதி?
ரகு: எனக்கும் சரியா தெரியாது . but அவரு CM ஆ இருந்தப்போ கொலை , கொள்ளை ரொம்ப கம்மியா இருக்குமாம் . Police Station ல 10, 15 பேர் தான் வேல பாப்பாங்கலாம் ! எங்க dad தான் சொன்னாரு அது golden period அப்படீன்னு !
அனைவரும் : Wow! station க்கு 10, 15 பேர் தானா ? amazing!
----------
அதே நேரம் Nanosoft Home Safety System Version 7.2 Software மூலம் பதிக்கப்பட்ட இரும்புக்கதவு உடைக்கப்பட்டு மூன்று கொள்ளையர்கள் உள்ளே நுழைகின்றனர் . கருப்பு நிற Sleeveless, Techee Jean மற்றும் Mask அணிந்திருக்கின்றனர் .
அவர்கள் ஆடையில் BRO 37-01, BRO 37-02, BRO 37-03 என்று அச்சடிக்கப்பட்டு உள்ளது .
ரகு : அடப்பாவிங்களா !
இஷா : Dad பயப்படாதீங்க ! இவுங்க Bank ல கொள்ளை அடிக்கிறவங்க ! Code Number பாத்தீங்களா ? BR- Bank Robbery
ரகு : பின்ன ஏன் நம்ம வீட்டுக்குள்ள வந்துருக்காங்க ?
BRO 37-01: Night பக்கத்துல இருக்குற Bank ல Plan பண்ணி இருக்குறோம் ! அது வரைக்கும் பொழுது போகணும்ல அதான் ஒங்க வீட்டுக்கு வந்தோம் !
ரகு : அதுக்கு ஏண்டா கதவ ஒடச்சீங்க ? போன வாரம் திருவான்மியூர்ல இருந்து காலி பண்ணி புது ஏரியாவுக்கு போறோமேன்னு புது Edition வாங்குனேன் . ரொம்ப Easy ஆ Hack பண்ணிட்டீங்களேடா !
BRO 37-01: அது சரி திருவான்மியூரை விட்டு ஏன் வந்தீங்க ?
ரகு : Sea Level Rise ஆகுதே !
BRO 37-02: குளோபல் வார்மிங் டா !
ரகு : எல்லாம் போன Generation பண்ணுன தப்பு ! கொஞ்சம் கூட அறிவில்லாம , நம்மள பத்தி யோசிக்காம கிறுக்குத்தனமா வாழ்ந்துட்டு போய்ட்டாங்க ! அது சரி அந்த Software ஒரு லச்சம் ரூவாடா !
BRO 37-01: சரி விடுங்க !
நிஷா :பேசாம அந்த காசுக்கு Gun வாங்கி இருந்தா இவுங்கள Shoot பண்ணி இருக்கலாம் !
BRO 37-02: டேய் ! எங்க கிட்டயும் Gun இருக்குதுடா !
நிஷா : எங்க காட்டுங்க !
காட்டுகிறான் BRO 37-02 .
நிஷா: இது Old Model , Third World War பத்தின Documentary ல பாத்துருக்கேன் ! எங்க History Disc ல கூட இருக்கு !
BRO 37-02: ரொம்ப வெவரமா இருக்கானே , பேசாம நம்ம கூட சேத்துக்கலாமா ?
ரகு : விட்டா BRO 37-04 அப்டீன்னு இவனுக்கு பேரே வெச்சுருவீங்க போல !
நிஷா : எனக்கு 07 கொடுங்க ! அதான் Stylish Number!
ரகு: அடச்சீ ! வாய மூடு !
நிஷா: ஏன்? ஒனக்கு Lucky ன்னு எட்டாவது Number வாங்கி கொடுக்கப் போறியா?
ரகு : அடக்கடவுளே!
ஜாஸ் : BRO ல , BR means Bank Robbery அந்த O எதுக்கு ?
BRO 37-01: O means Operation Team , Planning Team ன்னா P போடுவாங்க !
கல்பனா : இதுக்கு Planning Team வேறயா ?
BRO 37-02: அவுங்க எல்லாம் வெத்துவேட்டு ஏதாச்சும் English படம் பாத்து Plan பண்ணுவாங்க ! இது கூட Operation Bank 234 அப்டீன்னு ஒரு English படம்
கல்பனா : English படம் பாத்து தமிழ்நாட்டுல படம் தான் எடுப்பாங்க ! இப்ப கொள்ளையும் அடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா ?
இஷா : அப்படீன்னா ஒங்க Gang ல இன்னும் ரெண்டு Team வேற எடத்துல Wait பண்றாங்களா ?
BRO 37-01: அந்த படத்த பாத்துட்டியாக்கும் ?
இஷா : ம்ம் , அதுசரி இவரு ஏன் அமைதியாவே இருக்குறாரு ? (BRO 37-03 ஐ காட்டுகிறாள் )
BRO 37-01: அவரு அப்படித்தான், இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பணத்துக்காக கடத்திட்டு Rape பண்ற Gang ல இருந்தவரு ! இப்ப மனசு திருந்தி எங்க கூட சேந்துட்டாரு !
கல்பனா :இந்த பக்கம் வாங்கடி ! (என்றபடியே ஜாஸ் , இஷாவின் கைகளை பிடித்து இழுக்கிறார் , அதே நேரம் கொழுகொழு என இருக்கும் தன் மனைவி கல்பனாவின் கைகளை பிடித்து 'நீ மொதல்ல இந்த பக்கம் வா !' என்கிறார் ரகு )
ஜாஸ் BRO 37-01 ஐ நோக்கி : கைல என்ன Tattoo?
BRO 37-01: Seahorse!
அவர்களுக்கு அழைப்பு வர வீட்டை விட்டு கிளம்புகின்றனர் . வெற்றிகரமாக கொள்ளையடித்து விட்டு செல்கின்றனர்
----------
ஒரு வாரம் கழித்து ,
மற்றொரு கல்லூரியின் கலைவிழாவில் கலந்து கொள்ள சென்று இருக்கும் இஷாவிடம் அந்த கல்லூரி மாணவன் ஒருவன் பேசுகிறான் . அவன் குரல் மற்றும் Tattoo வை வைத்து அவன் தான் BRO 37-01 என கண்டு கொள்கிறாள் ! இப்படி கொள்ளையடிப்பது ஏன் என கேட்கிறாள் .
BRO 37-01: வசதியா இருக்குறதுக்கு தான்! . படிக்கிறவங்க கொள்ளை அடிக்கிறது 2008 லயே Start ஆயிடுச்சு !. ஒன்ன மாதிரி பொண்ணுங்க கூட ஏகப்பட்ட பேர் இருக்காங்க !
இப்படியே அரைமணி நேரம் பேசுகிறான்.
வார இறுதி நாட்களில் இளவரசி போல் வாழ்வதற்காக , தன் கல்லூரியில் போதைப்பொருட்களை விநியோகம்செய்ய இஷா சம்மதிக்கிறாள் .
இஷா : Ok bye , அப்புறம் Call பண்றேன் !
BRO 37-01: ஒன்னோட Code Number DD 543 - 08
இஷா (சிரித்தபடியே ) : DD means Drugs Distribution?
சனி, 13 ஜூன், 2009
ஜானி - சிறுகதை
இந்நிலையில் நான்காம் வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்தான் சுரேஷ் பாபு . அவனும் சில நாட்கள் செந்தில்குமாரிடம் கதை கேட்டான் . பின் அவனும் கதை சொல்ல ஆரம்பித்தான் . ஒரு வினோதமான மிருகம் பற்றி கூறினான் . அதன் பெயர் 'மண் விலங்கு ' என்றும் , தரைக்கு கீழேயே வரும் என்றும் , எங்கள் ஊர் கோபுரத்தின் உயரத்திற்கு அது இருக்கும் என்றும் , அதன் தோற்றம் கிட்டத்தட்ட ரயில் பூச்சி போல இருக்கும் என்றும் சொன்னான் . இது போல மிருகம் கிடையாது என செந்தில்குமார் சொல்ல , நீயும் நெறைய ரீல் விடுற என சுரேஷ் பாபு சொல்ல , இருவரும் கட்டிப்புரண்டனர் .
அதற்குப் பிறகு கதை கேட்கும் குழு இரண்டாக பிரிந்தது . செந்தில்குமார் பக்கம் நிறைய பேர் இருந்தனர் . சுரேஷ் பாபு பக்கம் கொஞ்சம் பேர் . நான் செந்தில்குமார் பக்கம் . சுரேஷ் பாபுவின் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக என் நண்பன் சொன்னான் . நானும் கேட்டேன் . அவன் ஏதாவது சத்தம் கொடுத்துக்கொண்டே கதை சொன்னான் . கதைக்கு திரைப்படங்களில் வருவது போல் பெயர் எல்லாம் போட்டான் .
' தடடடட்டான் மண்விலங்கு' என்பான் . மீண்டும் தடடடட்டான். கதை , திரைக்கதை , வசனம் , இசை , இயக்கம் உங்கள் சுரேஷ்பாபு என்பான் . சுரேஷ் பாபுவின் இந்த மாறுபட்ட யுக்தியால் பலரும் அவன் பக்கம் செல்ல ஆரம்பித்தனர் . நான் அப்போதும் செந்தில்குமார் பக்கமே இருந்தேன் .
சுரேஷ்பாபு தன் மாமா 'ஜானி ' என்று ஒரு பொம்மையை வைத்திருப்பதாகவும் , அது மந்திரசக்தி உடையது எனவும் , நாம் கேட்டதை எல்லாம் கொடுக்கும் எனவும் கூறினான் . நாங்கள் நம்பவில்லை . பின் ஒருநாள் ஒரு ஹீரோ பேனாவை கொண்டு வந்து ஜானி கொடுத்ததாக சொன்னான் . எங்களுக்கும் ஆசை வந்தது . ஜானி பற்றி அவனிடம் கேட்டோம் . அது ராத்திரியில் பறந்து சென்று பக்கத்தில் உள்ள மலையில் யாகம் செய்யும் என்றும் , காலையில் மட்டும் பால்ராஸ் குண்டுகள் ஒரு பத்து , பதினைந்து சாப்பிடும் என்றும் , டிவியில் கவுண்டமணியை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கும் என்றும் கூறினான் .'ஒரு நாள் ஜானி கிட்ட ஒங்கள கூட்டிட்டு போறேன் . ஒங்களுக்கு என்ன வேணுமோ அத கேட்டு வாங்கிக்கோங்க ' என்றான் .
என்னுடைய அப்பா எனக்கு வாங்கி கொடுத்தது ரப்பர் பால் பேட் . அதை வைத்து கேரக் பாலில் ஒரு ஓவர் கூட ஆட முடியாது . ஐந்தாவது பந்திலேயே ஹேண்டில் கையோடு வந்து விடும் . எனக்கு சச்சின் தெண்டுல்கர் போல MRF பேட் வாங்க ஆசை . எனவே நானும் சுரேஷ்பாபுவின் கதைகளை கேட்க ஆரம்பித்தேன் . அவ்வப்போது நாங்கள் செந்தில்குமாரின் கதைகளையும் கேட்டோம் .
பிறகு ஒருநாள் சுரேஷ்பாபுவின் வீட்டில் ஜானியைப் பார்த்தோம் . பத்து அடி தொலைவில் வைத்தே அதை காட்டினான் . ஒரு மிலிட்டரி ஆபீசர் பொம்மை போல முக்கால் அடி உயரத்திற்கு இருந்தது . இரும்பு பொம்மையாக தெரிந்தது . ஆடாமல் அசையாமல் ஒரு நாற்காலியில் நின்று கொண்டிருந்தது . அது கடவுளை வேண்டி ஆறு மாதங்கள் தவம் இருப்பதாகவும் , தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் சுரேஷ் பாபு சொன்னான் . ஐந்தாம் வகுப்புக்கு செந்தில்குமாரும் , சுரேஷ்பாபுவும் வேறு ஊருக்கு சென்று விட்டனர் . நாங்களும் ஜானியை மறந்து விட்டோம் . எங்களுக்கு கதை சொல்ல அதற்குப்பிறகு யாரும் வரவில்லை . இப்போது வரை யார் சிறந்த கதைசொல்லி என எனக்குத் தெரியவில்லை .
ம்ம்ம் , இன்னொரு விஷயம் ஜானியிடம் இருந்து MRF பேட் கிடைக்கும் என்று நான் நீண்ட நாட்கள் நம்பிக்கொண்டு இருந்தேன் .
ஞாயிறு, 19 ஏப்ரல், 2009
Scooty Pep + - சிறுகதை
ரகுவும் , அருணும் Honda - Shine இல் சென்று கொண்டிருக்கின்றனர் .
ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .............
Helmet அணிந்த ஒரு பெண் Scooty Pep + இல் திடீரென்று மறுபுறமிருந்து வந்து 'U' Turn போடுகிறாள் .
"கண்ண எங்கடி வெச்சுக்கிட்டு வரீங்க ? " அருண்
அவள் எதையும் கண்டுகொள்ளாமல் செல்கிறாள் !
"ஏண்டா ! வண்டி ஓட்டுற நானே மூடிட்டு வரேன் ஒனக்கென்ன ?" ரகு
"சேல , சுடிதார பாத்தா Off ஆயிடுங்கடா !"
" வண்டி number பாரேன் !"
"5555 ! பார்ரா ! இந்த வண்டிக்கெல்லாம் Fancy Number ! "
----------
இரண்டு நாள் கழித்து ,
இரவில் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் சாப்பிட்டுவிட்டு ரகுவும் , அருணும் நடந்து வந்து கொண்டு இருக்கின்றனர் . குப்பைத்தொட்டிக்கு அருகில் ஒரு பெண் .
"டேய் ! அந்த Figura பாரேன் ! செம்மையா இருக்கா !" அருண்
" பகுமானமா Pep + ல வந்து குப்பைய போட்டுட்டு போறா ?"
" டேய் ! அந்த பொண்ணு டா !"
"எந்த பொண்ணு !"
" ரெண்டு நாளைக்கு முன்னாடி குறுக்க வந்தாளே! "
"சும்மா எதையாவது அடிச்சு விடுறது ! அன்னிக்கு அவ மூஞ்சியவே நாம பாக்கல !"
"வண்டி Number பாருடா டுபுக்கு !"
"5555 Fancy Number !"
"நம்ம தெருவுக்கு புதுசா குடி வந்துருக்கா போல !"
அன்று கண்டுகொள்ளாமல் சென்று விட்டாள் .இன்று கண்டு கொள்ளாதது போல் சென்று விட்டாள்.
----------
மறுநாள் காலை ,
Jogging ,
ரகு , அருணுக்கு இணையாக அவளும் மிதமாக ஓடி வருகிறாள் .
ஒரு தெரு நாய் அவள் பின்னால் மோப்பம் பிடித்துக்கொண்டே வருகிறது . அவள் கூச்சம் கலந்த தயக்கத்துடன் அவர்களை பார்க்கிறாள் .
" ச்சே ! இங்க பாத்தியா ? காலக்கொடுமய , நாய் கூட பொண்ணு பின்னாடி தான் போகுது !" ரகு
அவள் சிறு புன்னகையுடன் ரகுவை பார்த்து விட்டு செல்கிறாள் .
----------
மறுநாள் மாலை ,
Honda - Shine .......
வரும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் அவளை பார்க்கின்றான் ரகு.
சிறிதும் தயக்கமின்றி
"வாங்க ! வீட்டுக்கு தான் போறேன் ! "
"இல்ல !"
"அட சும்மா வாங்க ! இதுல என்ன இருக்கு ?"
"Hello ! ஒங்க பேர் கூட எனக்கு தெரியாது ! ஒரே Area ல இருக்குறதுனால நீங்க Advantage எடுத்துக்காதீங்க ! "
"ஓஓ ! அப்ப பேரு தான் பிரச்சனையா ? என் பேரு ரகு ! இப்ப O.K யா வாங்க போலாம் !"
மெல்லிய குரலில் " ஐயோ !"
"எதுக்கு இந்த ஐயோ ? ஓஓ ஒங்க பேரு எனக்கு தெரியாதேன்னு பாக்குறீங்களா ? சரி சொல்லுங்க !"
" ம்ம்ம் மண்ணாங்கட்டி ! "
"இவ்வளவு அழகா இருக்கீங்க ! ஒங்களுக்கு மண்ணாங்கட்டின்னா பேரு வச்சுருக்காங்க ! சரி பரவாயில்ல வாங்க போலாம் !"
"இதுக்கு மேல ஏதாச்சும் பேசுனீங்க , பக்கத்துல இருக்குறவங்க கிட்ட Complaint பண்ணிடுவேன் !"
"ஏதோ நம்ம Area பொண்ணாச்சே , Help பண்ணலாம்னு பாத்தா .....சரி எப்டியோ போங்க ! bye !"
----------
மறுநாள் மாலை ,
Scooty Pep + ,
வரும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் அவனை பார்க்கின்றாள் .
"வாங்க ! வீட்டுக்கு தான் போறேன் ! "
"நான் ஒங்கள மாதிரி பிகு பண்ண மாட்டேன் . வாங்க போலாம் !"
"ஏன் Bus Stop ல நிக்குறீங்க ? "
"Bus ல போறதுக்கு தான் !"
"ஐயோ ! ஒங்க Bike குக்கு என்ன ஆச்சு !"
"Puncture ஆயிடுச்சு ! "
" நேத்து என் வண்டி Puncture ! இன்னிக்கு உங்க வண்டி Puncture ! "
ரகு சிரிக்கின்றான் .
"ஏன் சிரிக்குறீங்க ?"
"கடவுளோட Screenplay ய நெனச்சேன் ! சிரிச்சேன் ! சரி Ice Cream சாப்பிடலாமா ?"
"இது தான் Boys கிட்ட இருக்குற Bad Habit ! ஏதோ ஒரே Arae அப்டீன்னு Help பண்ணுனா ரொம்ப Advantage எடுத்துக்கறீங்க ! "
"ம்ம்ம் இது தான் Girls கிட்ட இருக்குற Bad Habit ! சரி எங்கயும் போக வேணாம் ! வீட்டுக்கே போங்க ! அதுக்கு முன்னாடி ஒங்க பேர சொல்லுங்க !"
"கல்பனா !"
"நல்ல பெயர் ! நல்ல பெயர் ! தந்தை என்ன செய்கிறாரோ ?"
"R.D.O!"
"ஓஓ இந்த வண்டி ஓட்டத் தெரியாதவைங்களுக்கு எல்லாம் Licence கொடுப்பாய்ங்களே ! அந்த வேலையா ?"
"ஐயோ ! அது R.T.O ! இது Revenue Department !"
"கூட பொறந்தவங்க எத்தன பேரு ?"
"நானும் ஏன் தங்கச்சியும் !"
"அவளாச்சும் நல்லா இருப்பாளா ? இல்ல ஒன்ன மாதிரி தானா ?"
"ஒனக்கு ரொம்ப தான் கொழுப்பு ! அவள விட நான் தான் அழகு ! சரி இங்க Ice Cream சாப்டலாமா ? நல்லா இருக்கும் !"
"எனக்கு ஒன்னோட Psychologyae புரியல !"
"அது தான் Girls ! "
----------
Ice Cream சாப்பிட்டு முடித்ததும் ,
"சரி ஒன்னோட நம்பர் கொடு !" ரகு
"999......!"
----------
இரவு எட்டு மணி ,
Mobile Phone
"சாப்டாச்சா ?" ரகு
"ம்ம்ம் !"
"என்ன ?"
"தோசை !"
"எத்தன ?"
"மூணு ! நீ என்ன சாப்ட ?"
..................................................
----------
ரெண்டு வாரம் கழித்து ,
"எத்தன முத்தம் டா கேப்ப ?"
"அது தான் Boys !"
ஞாயிறு, 12 ஏப்ரல், 2009
பேருந்து - சிறுகதை
அலுவலகம் முடிந்து பேருந்துக்காக காத்திருக்கிறேன் .
கடந்த ஒரு வருடமாக ஒரு தினப்பத்திரிக்கையின் அச்சகப்பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன் . என் நண்பர்கள் பலர் இன்னும் வேலை இன்றி திண்டாடிக்கொண்டு இருக்கின்றனர் . அதை எண்ணிக்கொண்டு இருந்த போது தான் பேருந்தின் ஒலி என் நினைவுத்திரையை கிழித்தது . என் அலுவலகத்தினருகே பேருந்து வரும் போது நிலையத்திலிருந்து இரண்டு நிறுத்தங்களை கடந்திருக்கும் . எனவே கூட்டம் அதிகமாக இருந்தது . படியிலேயே பலர் தொங்கிக்கொண்டு இருந்தனர் . மிகவும் சிரமப்பட்டு பேருந்தில் ஏறினேன் .பேருந்து கிளம்பியது . தொங்கிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் புதுப்பாடல் போடுமாறு சொன்னவுடன் இசைத்தட்டு மாற்றப்பட்டது . மிதமான வேகத்தில் தான் பேருந்து சென்று கொண்டு இருந்தது . இன்னும் மூன்று நிறுத்தங்களில் பேருந்து ஊரை விட்டு வெளியேறிவிடும் . அதற்குப்பிறகு வண்டி பஞ்சாய் பறக்கும் . வந்தது முதல் நிறுத்தம் . தனியார் பேருந்தல்லவா ? கிட்டத்தட்ட பதினைந்து பேரை பேருந்தில் திணித்தார்கள் நடத்துனர்கள் . வேலைக்கு சென்று விட்டு மாலையில் திரும்பி வரும் போது இந்த நெரிசலிலேயே பாதி உயிர் போய்விடும் . என் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து பேருந்தின் முன்புறத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன் . இரண்டாவது நிறுத்தம் நெருங்க இருந்ததால் நடத்துனர்கள் முன்புறமும் , பின்புறமும் படியில் உள்ளவர்களை , உள்ளே செல்லுமாறு கத்திக்கொண்டு இருந்தனர் . பலர் உள்நோக்கி வந்ததில் நான் நசுங்கிக்கொண்டிருந்தேன். 'இவர்களுக்கு முதுகை காட்டிக்கொண்டு நின்றால் ஓரளவு சமாளிக்கலாம் 'என நினைத்து சிரமப்பட்டு திரும்பினேன் . அப்போது பின்புறம் நின்ற ஒருவரின் காலை மிதித்து விட்டேன் .
" Sorry Sir !"
" பரவாயில்ல தம்பி !"
அவரை அடிக்கடி இந்த பேருந்தில் பார்த்திருக்கிறேன் . அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து உலக செய்திகள் பற்றி உரக்கப்பேசிக்கொண்டு வருவார் . இன்று அவரது நண்பரை காணவில்லை .
முழுவதுமாக பின்புறம் திரும்பி நின்றேன் . அப்போது தான் கவனித்தேன் அந்த பேரழகுப்பதுமையை . பள்ளி மாணவி , சீருடை அணிந்திருந்தாள் . பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பாள் என நினைக்கிறேன் . இருந்தும் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவியை போன்றதொரு முதிர்ச்சி . இருவரும் ஒருவரையொருவர் பார்க்கும்படி நின்று கொண்டிருந்தோம் . பேருந்து இரண்டாம் நிறுத்தத்தில் நின்றது . சிலர் இறங்கினர் ;பலர் ஏறினர் . பேருந்து கிளம்பியது . சிறிது நேரம் கழித்து மூன்றாவது நிறுத்தமருகே செல்லும் போது மீண்டும் நடத்துனர்கள் பயணிகளை உள்ளே செல்லுமாறு கூறினர் . எனக்கு பின்னாலிருந்தவர் என்னை நகரச்சொன்னார். அந்த பெண்ணையும் அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தவர்கள் நகரச்சொன்னார்கள். நான் நகர்ந்தால் அந்த பெண் மீது இடிக்க வேண்டிய நிலை ஏற்படுமென்பதால் , நான் நகரவில்லை . நடத்துனர் மீண்டுமொருமுறை கூற , அந்தப்பெண் என் நிலையுணர்ந்து என்னை பரிதாபமாக பார்த்தாள் . நானும் ' நான் என்ன செய்ய ? ' என்பது போல அவளை பார்த்தேன் . எனக்குப் பின்னால் நின்றிருந்தவர்கள் நடத்துனரின் அதட்டலால் என்னை இடித்துத்தள்ளினர். எனினும் நான் முன்னே செல்லவில்லை . ஆனால் இந்த கலவரத்தால் என்னுடைய வலது காலை வைக்க இடமில்லாமல் போய்விட்டது . என் நிலை உணர்ந்து அந்தப்பெண் தன்னுடைய இரண்டு கால்களையும் மிகவும் சிரமப்பட்டு நகர்த்தி நடுவே எனது காலை வைப்பதற்கு இடம் தந்தாள். நல்லவேளை இனி நிறுத்தங்கள் கிடையாது . இருபது நிமிடங்கள் கழிந்தன . ஊர் வந்துவிட்டது . ஒவ்வொரு நிறுத்தத்திலும் கூட்டம் குறைய குறைய பேருந்தில் காற்று வீசியது . அப்போது எனக்கு தோன்றவில்லை இப்போது தோன்றியது . கூறினேன் .
"ரொம்ப thanks!"
"எதுக்குண்ணா?"
"கால் வைக்க எடம் தந்ததுக்கு ! "
"அடப்போண்ணா இதுக்குப்போய் thanks எல்லாம் சொல்லிக்கிட்டு !"
என் நிறுத்தம் வந்ததால் ,
"வரேன் !"
"O.K. ண்ணா! bye !"
'பெண்மை எதையும் எளிதில் புரிந்து கொள்கிறதே ! ' என வியந்து கொண்டே வீட்டிற்கு சென்றேன். எனக்காக பாசத்துடன் மாலை உணவு தயார் செய்து வைத்து காத்திருந்தாள் என் அம்மா . அப்போது தான் எனக்கு தோன்றியது 'என்னைப்போன்ற ஒரு மகனுக்கோ இல்லை மகளுக்கோ அற்புதமான தாய் உருவாகிக்கொண்டு இருக்கிறாள் ' என்று . ஆம் அது அந்த மாணவி .
அவள் - சிறுகதை
அது ஒரு அழகிய மாலை நேரம் . கடலும், மணலும் என்னைச் சூழ்ந்து இருக்க , மேகங்களை ரசித்துக் கொண்டே என் பார்வை தரையிறங்கிய போது தான் அப்பெண்ணைக் கண்டேன் . Jeans , T - Shirt அணிந்து அமர்ந்திருந்தாள் . வலது கையில் Bracelet , வளையல் ஏதும் இல்லை . வளையல் அணிவது Out of fashion போல .இடது கையில் Cell Phone உம் , வலது கையில் Ice Cream மற்றும் கைக்குட்டை வைத்திருந்தாள் . உள்ளங்கையின் முக்கால்பகுதியில் கைக்குட்டையும் , Ice Cream இன் அடிப்பகுதியும் அடங்கியிருந்தது . Cell Phone - இல் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள் .
' இருள் இயங்கத்துவங்கும் இந்நேரத்தில் Ice Cream சாப்பிடுகிறாளே ! ' என்று எனக்குப் பதட்டம் . நாகரீக உலகம் ஏற்படுத்தும் பாதிப்புகள் அவளிடம் நன்கு தெரிந்தது . பின் புறம் திரும்பிப்பார்த்தேன் . கணிசமாய் கூட்டம் கூடத்துவங்கி இருந்தது . திரும்பிப்பார்த்தால் அப்பெண்ணைக் காணவில்லை . என் பார்வைக்குதிரையை எட்டுத்திக்கிலும் விரட்டினேன் . இருந்தும் அவள் அகப்படவில்லை .ஓரிரு நாட்கள் அவளின் அழகு எனக்குள் தேங்கி இருந்தது .
பின்பு ஒரு நாள் , மார்கழி மாதத்தின் விடியற்காலை நேரத்தில் , கோதையின் ஆலயத்திற்கு சென்றிருந்தேன் . கோதையை தரிசித்து விட்டு வந்த போது அவளை மீண்டும் கண்டேன் . ஆனால் அப்போது தமிழ்மணம் வீசும் மலராக காட்சி தந்தாள். அவள் புடவை அணிந்திருந்தாள் . அதனை பார்த்தவுடனே பட்டுப்புடவை என்றோ , சாதாரண புடவை என்றோ ரகம் பிரிக்க இயலாது . எனினும் அது பட்டுப்புடவை போன்ற தோற்றமளிக்கும் சாதாரண Cotton புடவை . கூந்தலை பரப்பி விட்டு , கழுத்தின் பின்புறம் கூந்தலில் ஒரு முடிச்சு போட்டிருந்தாள். அவள் வைத்திருந்த மல்லிகையின் மணம் காற்றில் பறந்து வந்து என்னைத் தாக்குவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது .நெற்றியில் மெலிதாக அவள் வைத்திருந்த சந்தனமும் , விபூதியும் கேரளப் பெண்களை நினைவுபடுத்தியது .கையில் வைத்திருந்த தட்டில் தேங்காய் , பூ , பழங்கள் இருந்தன. இடது கையை தட்டின் கீழ் வைத்தும் , வலது கையை தேங்காய் மீது வைத்தும் , கால் கொலுசொலி கேட்க அவள் நடந்த அழகு இருக்கிறதே அதை காண கண்கள் பல வேண்டும் .யாரோ அவளை அழைக்க ஓட்டமும் , நடையுமாக கோவில் வாயிலை நோக்கி சென்றாள் . இம்முறையும் அவள் என் பார்வையில் இருந்து தொலைந்து போனாள்.
நாம் யாரென்றே அறியாத ஒரு பெண்ணை , அப்பெண்ணே அறியாத வண்ணம் நாம் காண்பதிலும் ஒரு சுகமிருக்கிறது . ஒருநாள் அப்பெண்ணை கால மாற்றத்தில் கலந்து போன நவீன நங்கையாக கண்டேன் . மற்றொரு நாள் பழமை மாறாத பதுமையாக பார்த்தேன் . என்றாவது ஒரு நாள் அவளை வேறு ஒரு பரிணாமத்தில் காண்பேன் என நினைக்கும் இவ்வேளையில் , என் மனம் சொன்னது ' அது வரைக்கும் வேற பொண்ணுங்கள sight அடி ! ' .
சனி, 11 ஏப்ரல், 2009
சும்மா ஒரு டெஸ்ட்
என் கூட சும்மா கிளாஸ் வந்தவங்களுக்கும் , எலெக்ட்ரிகல் படிக்க கிளாசுக்கு வந்தவங்களுக்கும் !
1. இவரு அரிச்சந்திரனோட அக்கா பய்யன் . சொந்தக்கடயிலயே சோன்பப்படி திருடுரவரு !
a. பஜ்ஜி
b. சொஜ்ஜி
c. பாவ்பாஜி
d. பாலாஜி
2. இவருகிட்ட ஒரு விசயத்த சொன்னா ரொம்ப ரகசியமா இருக்கும் ! குறிப்பா பொண்ணுங்கள பத்தி !
a. மோகன் குமார்
b. காந்தி (அல்லது ) வர்கீஸ்
c. வெடிப்பண்டாரம்
d. அனைத்தும் சரி !
3. பிகரு கெடைக்காத ஏக்கத்துல எய்ட்ஸ் பேசண்ட் மாதிரி ஆனவரு !
a. அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்
b. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்
c. வெறும் விஜயகுமார்
4. வாரத்துல ஏழு நாள் மட்டும் குளிக்காதவரு !
a. நரி நரசிம்மன்
b. புலி புருசோத்தமன்
c. சிங்கம் சின்ராசு
d. அருண் கார்த்திக்
5. ஒலகத்துலயே ஆர்குட்ல அதிகமா போட்டோ வெச்சுருக்குரவரு ! வெளம்பரத்த விரும்பாதவரு !
a. கல்யாண்
b. மண்யான்
c. புல்யான்
6. ஒரு பிகர கூட கரெக்ட் பண்ண முடியாட்டியும் ப்ளே பாய் மாதிரி பேசுறவரு ! கண்ணாடி போட்ட கருப்பு பாக்யராஜ் !
a. செந்தில்குமாரு
b. பொந்தில்குமாரு
c. சந்தில்குமாரு
d. வெளக்குமாறு
7. ஒரே நாள்ல ஒன்பது ஓசி சட்ட போடுரவரு !
a. அன்சாரி
b. அயாம் சாரி
c. காட்டன் சாரி
8. 'தான் ஒரு சிறந்த பின்னணி பாடகர் ' அப்டீன்ற நெனப்புல ஒரு நாளைக்கு 48 மணி நேரம் சாதகம் செய்றவரு !
a. மனோஜ் குமார்
b. திருச்சி தாதா
c. டிவி க்கு புருஷன்
d. அனைத்தும் சரி !
9. நம்ம கூட படிச்ச பதினெட்டு பொண்ணுங்கள்ல , பசங்களோட கனவுக்கன்னி யாரு ?
a. நயன்தாரா
b. அசின்
c. தமன்னா
d. Question out of syllabus
10. ஹாஸ்டல்ல இருந்து வினோத்பாபுவ டிஸ்மிஸ் செஞ்சதுக்கு பிரின்சிபால் சொன்ன காரணம் ?
a. அவன் ரொம்ப நல்லவன்டா !
b. ஹாஸ்டல்ல அடச்சு வெச்சு அவன் அறிவ வேஸ்ட் ஆக்கிடக்கூடாது !
c. அவன் ஒரு புயல் மாதிரி ! அவன அடச்சு வைக்குறது நமக்கு தான் ஆபத்து !
d. கண்டிப்பாய் அனைத்தும் சரி !
சரியான பதில்கள சொல்ற எல்லாருக்கும் ,சரக்கில்லாத பாட்டிலும் , சைடு டிஷ்ஷா ஊசிப்போன உளுந்த வடையும் கொடுக்கப்படும் .