02 February, 2011

காதலி - சிறுகதை

'உன்னால டூருக்கு வரமுடியுமா ? முடியாதா ?' பிரபு
'கண்டிப்பா முடியாது  மாப்ள ! உனக்கு தான் அப்பாவ பத்தி தெரியுமே !' ரகு
'இப்படிப்பட்ட அப்பா கூட இருந்துகிட்டே ஆண்டிங்கள கரெக்ட் பண்ணி மேட்டர் பண்ண மட்டும் டைம் கெடைக்குது ! எங்க கூட டூர் வரச் சொன்னா,   வரமுடியாது ! விட மாட்டேங்குறாருன்னு சொல்றது !'
'அப்பா விடமாட்டார் மாப்ள ! கோச்சுக்காம போயிட்டு வா மாப்ள !'
 என் தந்தை கொஞ்சம் கோபக்காரர் ! ஊரில் பெரிய மனிதர் ! அவரது கண்காணிப்பையும் தாண்டி நான் சில  பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன் !  நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த காலத்தில் ,  சக மாணவிகளுடன் உடலுறவு என்பது எளிதான காரியம் அல்ல ! ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை ! ஒவ்வொரு வகுப்பிலும் ஏகப்பட்ட காமக்கதைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன ! திருச்சிக்கும் , தஞ்சாவூருக்கும் இடையே இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில்  படித்தான் என் நண்பன்  பிரவீன் ! அந்த பல்கலைக்கழகத்தின் எதிரே கடை வைத்திருக்கும் குட்டி அண்ணனுக்கும் அவனுக்கும் நல்ல பழக்கம் ! அவன் கல்லூரியை விட்டு வெளியே வந்து மூன்று ஆண்டுகள் கழித்து அவரை பார்க்கச் சென்றான் பிரவீன் ! ப்ரவீனுடன் நானும் சென்று இருந்தேன் ! அப்போது தான் குட்டி அண்ணன் சொன்னார் ' 2007 செட் தான் தம்பி ! 2008 செட் கூட ஏத்துக்கலாம் ! ஆனா அதுக்கப்புறம் வந்த பயலுக சரி இல்லை தம்பி ! ஊசி , மாத்திரை , பொம்பளை எல்லாம் உண்டு ! பொம்பளைன்னா தேவடியா இல்ல தம்பி ! எல்லாம் கூட படிக்கிற புள்ளைங்க ! அட்டகாசம் பண்றாங்க ! ' இப்போது இருப்பவர்கள் கெட்டவர்கள் ! அப்போது படித்தவர்கள் நல்லவர்கள் என்றெல்லாம் கிடையாது ! வாய்ப்பு கிடைக்காதவரை  அனைவரும் நல்லவர்கள் தான் ! யார் எப்படியோ ! நான் நல்லவன் இல்லை! என் புத்தி எச்சில் புத்தி !  2007 இல் கல்லூரி படிப்பை முடித்தவன் நான் ! அப்போது எங்கள் கல்லூரியில் இது போன்ற கதை ஒன்று ,இரண்டு தான் இருந்தது! இப்போது நிலைமை அப்படி இல்லை ! ஒவ்வொரு வகுப்பிற்கும் குறைந்தது பத்து ஜோடிகளாவது இருக்கின்றன ! அப்போது கொஞ்சம் கடினமாக தெரிந்த விஷயம் இப்போது எளிதாகி இருக்கிறது ! இன்று நிலைமை தலைகீழ் ! கல்லூரியை விட்டு வெளியே வருவதற்கு முன்பே பாதிக்கும் மேலானவர்களின் கன்னித்தன்மை காணாமல் போய்விடுகிறது ! இன்று காதலிகளையும் , காதலர்களையும் மாற்றிக்கொள்வது சர்வ சாதாரணம் ! ஆனால் நான் கல்லூரியில் படித்தபோது பெண்களுடன் பேசவும் , பழகவுமே பலர் தயங்குவர் ! அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே நான் இரண்டு பேருடன் பழகி காரியத்தை முடித்தேன் ! அதுபோக திருமணமான இரண்டு பெண்களுடன் வேறு தொடர்பு வைத்திருந்தேன் ! அப்போது தான் என் வாழ்க்கையில் வந்தாள் கல்பனா ! அப்போது நான் இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருந்தேன் ! என் துறையிலேயே இரண்டாம் ஆண்டு மாணவியாக அவள் வந்து சேர்ந்தாள் !
'டேய் ! கல்பனாவ பாத்தியா ?'பிரபு
'ம்ம் ! பாத்தேன்டா ! சரியான டிக்கெட்டு ! வெச்சு வெச்சு போடலாம் ! 'ரகு
'ட்ரை பண்ணப் போறியா ?'
'பின்ன ! இன்னும் எத்தன நாளு தான் இவளுகளோட போறது ? போரடிக்குது மாப்ள !'
'ம்ம் பாத்து மாப்ள நல்ல பொண்ணா தெரியுது ! '
'நாங்க பாக்காத நல்ல பொண்ணா ! முடிச்சு காட்றேன்! அப்புறம் தெரியும் அந்த நல்ல பொண்ணோட  லட்சணம் !'
கல்பனாவை எப்படியாவது கட்டிலுக்கு இழுத்து விட வேண்டும் என நினைத்தேன் ! ஆனால் அவளிடம் இருந்தது அழகான காதல் , நேர்மையான காதல் ! நான் அழைத்தாலும் அவள் வந்துவிடும் நிலையில் இருந்தாள் ! ஆனால் அவளது காதலை உணர்ந்த பின்பு என்னால் அதை செய்ய முடியவில்லை !  நான் அவளிடம் இருந்து மெல்ல விலக ஆரம்பித்தேன் ! அவள் என்னை விடாமல் துரத்தினாள்!
'என்னடா ! கல்பனாவ முடிச்சுட்ட போல ?' பிரபு
'இல்லடா! அவ நல்ல பொண்ணு ! அதான் ஒதுங்கிட்டேன் !'ரகு
'நீ பாக்காத நல்ல பொண்ணா ?'
'அவ அவ்வளவு சின்சியரா லவ் பண்றாடா  ! அவள ஏமாத்த மனசு வரலட ! '
'பார்ரா ! சாத்தான் வேதம் ஓதுதா  ?'
அவளுக்கு என்னை மிகவும் பிடித்து இருக்கிறது ! விடாமல் துரத்தினாள்! ஒருநாள் அவளை உட்கார வைத்து அனைத்தையும் விளக்கினேன் ! உன் காதலுக்கு நான் தகுதியானவன் இல்லை ! தயவு செய்து என்னை விட்டுவிடு என என் கதைகளை எல்லாம் கூறினேன் ! அதை எல்லாம் கேட்ட பிறகாவது மனம் மாறுவாள் என எண்ணினேன் ! ஆனால் அவள் மனதளவில் இன்னும் திடமானாள் !  'இந்த உலகில் நான் யாரையாவது மணக்க நேர்ந்தால் , உன்னைத்தான் மணப்பேன்' என்றாள் ! இப்போது நான் கல்லூரியை விட்டு வெளியே வந்து நான்கு வருடங்கள் முடியப்போகின்றது ! இன்னும் அவள் என்னை தான் காதலிக்கிறாள் ! என் நேர்மை அவளுக்கு பிடித்து இருக்கிறதாம் ! 'ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாது என எந்த ஆண் மகன் நினைக்கிறானோ அவனை விட நல்ல துணை அவளுக்கு கிடைக்காது ! ஆதலால் நீ தான் என் காதலன் ! நீ தான் என் கணவன் !' என்கிறாள் !  என்ன செய்ய ? அவளை எப்படியாவது கைப்பிடிக்க வேண்டும் ! என் வீட்டில் பேசி சம்மதம் பெற வேண்டும் !
என் தந்தை தான் ஊரில் எங்கள் சாதிச்சங்கத்தலைவர் ! அவர் ஊருக்கெல்லாம் ஆலோசனை சொல்கிறவர் ! அதனால் 'என் மகன்  இப்படி வழி மாறி வேற்று சாதி பெண் பின்னால் போவதை  ஒரு போதும் ஏற்க முடியாது! அப்படி என் மகன் போனால் நான் இறப்பதை யாராலும் தடுக்க முடியாது !' என்று சொல்லி விட்டார் ! 'அவர் தான் எனக்கு முக்கியம் ! அவருக்கு  அடுத்து தான் நீ !  அவர் சொல்வதை கேள் ! என்னால் எதுவும் செய்ய முடியாது !' என ஒதுங்கி விட்டாள் என் அம்மா ! 'அப்பா , அம்மாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது !' என என் அக்காவும் கை விரித்து விட்டாள் ! என் தந்தையை மீறி என்னால் நிச்சயம் போக முடியாது ! அவரது பலம் என்னை போகவும் விடாது ! அப்படிப் போனாலும் வாழவும்  விடாது !  அவளிடமும் பேசிப்பார்த்து விட்டேன்! பலனில்லை ! 'வீட்டை விட்டு வந்துவிடு 'என்கிறாள் ! அவள் வீட்டில் சம்மதம் வாங்கி விட்டாள்! என்ன செய்வது என்றே தெரியவில்லை ! அவளுக்கு நான் முக்கியம் ! இப்போது எனக்கும் அவள் முக்கியம் ! என் வீட்டை மீறியும் என்னால் எதுவும் செய்ய முடியாது ! இந்தக் குழப்பத்தில் மனம் என்ன செய்வது என்று தெரியாமல் தாறுமாறாக அலைபாய்கிறது  ! சாலையில் வேகமாக வரும் லாரியில் திடீரென்று பாய்ந்து விடலாமா என்று தோன்றுகிறது ! 'உன்னுடன் சேரமுடியாமல் போனதற்கு என்னை மன்னித்து விடு' என கல்பனாவிடம் கூறிவிட்டு தூக்க மாத்திரைகளை விழுங்கினேன் ! ஆனால் மரணத்தை தழுவும் வேளையில்  என்னை காப்பாற்றி விட்டனர் ! ' நீ இறந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே ! ஆனால் உன் காதலை மறந்துவிடு ! அது நிறைவேறாது !' என எளிதாக சொல்லிவிட்டு சென்று விட்டார் என் தந்தை ! நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டாள் கல்பனா ! அப்போது என் தந்தை அங்கு இல்லை ! 'காதலோ , பாசமோ எப்போதும் ஒருவரை சிரிக்க வைத்து மட்டுமே பார்க்க வேண்டும் ! உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த உன் வீட்டை விட்டு என்னுடன் வா ! 'என்றாள்! 'என் ரகுவை நன்றாக நான் பார்த்துக் கொள்வேன் ! இனி  அவனை உங்களை நம்பி ஒப்படைக்க நான் தயாரில்லை' எனச் சொல்லி என்  தாயையும் , சகோதரியையும் அறையை விட்டு வெளியேறச் சொன்னாள் ! நான் அவள் துணிச்சலை பார்த்து திகைத்துப் போனேன் ! என் தாய் என்னிடம் வந்தாள் ! 'சாகவும் துணிந்து விட்ட பிறகு வாழ்வதற்கு  என்ன வேண்டுமானாலும் செய்யலாம்  , உன் தந்தையின் வறட்டு  கவுரவத்திற்காக உனக்கு கிடைத்த இந்த பொக்கிசத்தை இழந்து விடாதே' என்றாள் ! ஆமாம் நம் சமூகத்தில்  பல காதலர்கள் , காதல் என்றால் என்னவென்றே புரிந்து கொள்வது இல்லை! அப்படி புரிந்து கொண்ட சிலரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இந்த சமூகத்திற்கு  இல்லை ! தற்கொலை எவ்வளவு முட்டாள் தனமான முடிவு என்பது கல்பனாவின் முகத்தை பார்த்தபோது புரிந்தது ! காதலிப்பவர்கள் எப்போதும் சுவற்றின் மீதிருக்கும் பூனை போல இருக்கக்கூடாது ! உங்கள் காதலுக்கு நேர்மையாக இருங்கள் !  அந்தக்காதலை எப்படியாவது அடையுங்கள்!  உண்மையான அன்பு எப்போதும் உங்களை கண்ணீர் சிந்த வைக்காது ! இனியும் இந்த பொக்கிசத்தை இழக்க நான் தயாரில்லை ! நாளை எனக்கும் கல்பனாவுக்கும் திருமணம் ! யார் எதிர்க்கிறார்கள் என பார்க்கிறேன் !  

9 comments:

Ishu mad on blue சொன்னது…

hi anna
kadhaila irundha luv chancae ila anna REAL LUV..but enna andha pona andha pyan late ah purinju kitan ....its true now adays ivalo real luv pakuradhu hdan kashtam
but story really rocks anna keep on dng this surprise storyku thanks

Manmathan சொன்னது…

There should be some dare to write abt wats happenin in current generation...U hav it.... Some of the things r realy surprising ...Keep writing...

ram சொன்னது…

Very Cinematic!!!

பராசக்தி படத்துல கருணாநிதி வசனத்த சிவாஜி பேசுற மாதிரி இருக்குது அந்த last paragraph.

உன் கிட்ட இருந்து இன்னும் நெறைய எதிபார்க்கிறோம்

PraveenKumar சொன்னது…

Nice Story da.. J

Ellathayum anaubavichavanukku ipdi oruthi kedacha pokisham daan…

Madhu Sudan சொன்னது…

enna da SJ Surya mathri script elithiiruka!!! I didnt like the contents of this story though it is real.

BALAJI .L.V. சொன்னது…

mapla nice story da.....
pathiya ethana ponnunga emanthudunthunga nu.....
pavama iruku...unmaiya love pannuravana purijukave matenguthunga machi....enna panna patta than thirunthungaa...silathu pattum thirunthamatenguthu....enna seiyaaa...nice wrds...ippadiyavathu inki ponnunga purinjukattum...

Vivek சொன்னது…

Machi,


Superda, unmaiya nalla irukku. Inthamathiri kathaya padichavathu 4 peru thirunthattum.


Innu nalla try pannu da. All the best

Mohankumar சொன்னது…

dai kathali story was really nice da....

sundar சொன்னது…

Its really rocking da.