நான் ஹேமா ! என் தந்தையின் நண்பர் ராதாகிருஷ்ணனின் ஒரே மகன் தான் தீபக் ! சிறுவயதில் இருந்தே அவனை எனக்குத் தெரியும் ! அப்போது இருந்தே அவனை எனக்கு மிகவும் பிடிக்கும் ! இருவரும் ஒரே கல்லூரிக்குப் போனோம்! இன்று இருவரும் ஒரே ஊரில் வேலை பார்க்கிறோம் ! கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு தான் என் காதலை அவனிடம் சொன்னேன்!
'நீ லவ்வே பண்ணாம இருந்தாலும் உங்க அப்பா உன்ன என் தலைல கட்டிடுவாரு ! ' என சிரித்துக் கொண்டே சொன்னான் !
எங்கள் வகுப்பிலேயே அவனை வளைத்துப் போட மூன்று பேர் முயன்றனர் ! ஆனால் தீபக் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை ! அவனிடம் இயல்பாக பெண்கள் பேசிப் பழகினால் பிரச்சனை இல்லை ! காதல் எட்டிப் பார்க்கிறது எனத் தெரிந்தால் , திறமையாக அவர்களை கழட்டி விட்டு விடுவான் !அதற்கும் மேல் ஒட்டினால் திட்டித் தீர்த்து விடுவான் !
-----
ஒரு பிப்ரவரி 14 இல் ,
'தீபக் ! இன்னிக்கு நான் எப்படி இருக்கேன் ?' அனிதா
'எப்பயும் போல தான் !'
'நல்லா பாரு ! '
'எப்டி பாத்தாலும் அதே மூஞ்சி தான் ! என்னனு சொல்லு !'
'இல்ல !............உன்ன பாத்ததுல இருந்தே நான் .............லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் தெரியுமா ? மொத செமஸ்டர்ல இருந்து ! ......ஆனா உன்கிட்ட இத சொல்றதுக்கு தைரியமே வரல ! இப்போ பைனல் செமஸ்டர் வந்துட்டோம் ! தீபக் ....!'
'இத ஏன் இப்போ வந்து சொல்ற ?.......'
தீபக்கை பேச விடாமல் குறுக்கிட்டு ,
'இல்ல எனக்கு கலர் கொஞ்சம் கம்மி ! உன்ன இம்ப்ரெஸ் பண்ண தான் நாலு வருசமா ஏகப்பட்ட டெக்னிக் யூஸ் பண்ணி கலர இம்ப்ரூவ் பண்ணுனேன்!'
தீபக் எரிச்சலுடன் 'என்ன டெக்னிக்?'
'ம்ம் ! முட்டையோட வெள்ளக்கரு , எலுமிச்சம்பழ சாறு , தயிர் , கடலைமாவு எல்லாம் கலந்து டெய்லி மொகத்துல அர மணி நேரம் ஊற வைப்பேன் ! இப்ப எப்படி இருக்கு மூஞ்சி ? '
'நாலு வருசத்துக்கு முன்னாடி இருந்த அதே மூஞ்சி தான் ! மூதேவி ! மூதேவி ! டெய்லி அர மணி நேரம் ஒழுங்கா படிச்சிருந்தா மேக்ஸ் டூ , மேக்ஸ் த்ரீ ரெண்டையும் தூக்கி இருக்கலாம் ! காலேஜுக்கு வந்தோமா ஒழுங்கா படிச்சமான்னு இல்லாம கடலை மாவு , இட்லி மாவுன்னு ! ஏன் கிச்சன்ல இருக்குற எல்லாத்தையும் எடுத்து மூஞ்சில அப்பிக்கோயேன்! ஒழுங்கா படிச்சு கடைசி செமஸ்டர்ல அரியர் எல்லாம் தூக்கப் பாரு ! அத விட்டுட்டு லவ்வு கிவ்வுன்னு வந்த தொலச்சுப்புடுவேன்!'
'என்ன தீபக் ?.......' என அனிதா இழுக்க ,
தீபக் அனிதாவின் குரலிலேயே ' எனக்கு கலர் கொஞ்சம் கம்மி ! அதான் இம்ப்ரூவ் பண்ணதான் ! ஏற்கனவே வெள்ளையா தான இருக்க இன்னும் வெண் குஷ்டம் வந்த மாதிரி ஆகணுமாக்கும் ! போடி! '
-----
வேலைக்கு சென்று விட்ட பிறகு சனி , ஞாயிறு அலுவலக விடுமுறை நாட்களில் தான் நாங்கள் சந்திக்க முடிகிறது !
-----
ஒரு சனிக்கிழமை மாலை திரையரங்க வாசலில் ,
'தீபக் ! கார்னர் சீட் புக் பண்ணிட்டேன் ! ஓகே யா ?' என கண் சிமிட்டுகிறாள்!
'ஏண்டி அலையுற ?'
'யாரு நானு ?'
'பின்ன நானா ?'
'தேட்டர் வாசல்ல சண்ட வேணாம் ! உள்ள போகலாம் !'
திரைப்படம் ஆரம்பிக்கிறது ! தீபக் சுவாரஸ்யமாக திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறான் ! சிறிது நேரத்தில் திரைப்படம் தேறாது என தெரிந்தவுடன் ஹேமாவின் தோளில் கையைப் போடுகிறான் !
'மேல கையப் போட்ட கழுத்த வெட்டிடுவேன் !'
'ஏண்டி ! நீ தான பாஞ்சு பாஞ்சு கார்னர் சீட் புக் பண்ணுன ?'
'அதுக்கு ? நான் ஒண்ணும் அலையுரவ இல்ல !'
'ஒங்களுக்கு இதே வேலையாப் போச்சு ! ஏதோ கிண்டலுக்கு சொன்னா உடனே மூஞ்சிய தூக்கி வெச்சுப்பீங்களே ! '
தீபக்கின் கையை ஒதுக்கி விட்டு ,
'என்ன ப்லூரல்ல பேசுற ? அப்படின்னா வேற யார் கூடயாச்சும் சுத்துறயா?'
'போச்சுடா !'
'ஒன்னப் போய் நம்புனேன் பாரு என்ன சொல்லணும் !'
'பிரபு தாண்டி சொன்னான் ! இப்படி அவன் ஆளு பண்ணுனா அப்டீன்னு ! அத வெச்சு பொதுவா சொன்னா........ யப்பா! ஒங்கள கட்டி மேய்க்கிறதுக்குள்ள !'
'பிரபு ! அவன்லாம் ஒரு ஆளு ! அவன் கூட இனிமே சேந்த தொலைச்சுட்டேன் ! குடிகாரப்பய !'
'சரிடீ ! விடுடீ !'
-----
தீபக்கின் அண்ணனுக்கு திருமணம் முடிந்த பிறகு தான் எங்களின் திருமணம் என இருவர் வீட்டிலும் முடிவு செய்து இருந்தனர் ! எனவே அதுவரை இது போன்று வாரவிடுமுறைகளில் சந்தித்துக் கொண்டு இருந்தோம்! அப்போது தான் தீபக்கின் அலுவலகத்தில் இருந்து அவனை இரண்டு மாதங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர் !
'போற இடத்துல ஒழுங்கா இருக்கணும் ! கேக்க ஆள் இல்லைன்னு சொல்லிட்டு ஏதாவது ஆட்டம் போட்ட கொன்னுருவேன் !'
'அது சரி ! வெள்ளக்காரி எவளாச்சும் என்ன சுத்தி வந்தா என்ன பண்றது ?'
'அந்த நெனப்பே இருக்கக் கூடாது ! தொலச்சுருவேன் ! வெள்ளக்காரி , வேலக்காரின்னு கிட்டு !'
தீபக் இப்படித்தான் பேசுவானே தவிர பெண்கள் விசயத்தில் அவன் எப்படி என்று உங்கள் அனைவருக்குமே தெரியும் ! எனக்கு இவன் மேல் நம்பிக்கை இருக்கிறது ! ஆனால் ஊரில் இருக்கும் மற்ற பெண்கள் மீது நம்பிக்கை இல்லை ! அதனால் தான் இப்படி ! மற்ற பெண்களுக்கு பயந்தே மோசமான முழுக்கைச் சட்டைகளை அவனுக்கு வாங்கித் தருவேன்! ஏனென்றால் அந்த ஆடைகளில் அவன் அழகாக இருக்கமாட்டான்! இதன் மூலம் அவனைப் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கையை ஓரளவாவது குறைக்கலாமே!
'ஏண்டி ! பாத்தா பாத்துட்டு போறாளுக ! அதுக்காக இதெல்லாம் ஓவரு !'
'எல்லாம் எனக்குத் தெரியும் ! '
'மசக்களி சுடி ! மண்ணாங்கட்டி சுடின்னு வித விதமா போடுறியே ! ஒன்ன நான் ஏதாச்சும் சொல்றேனா ? ம்ம் அதுசரி ! நீ என்ன போட்டாலும் ஒன்ன எவனும் பாக்கப் போறது கெடயாது !'
'யார் சொன்னா என்ன எவனும் பாக்க மாட்டேன்றான்னு ? போன வாரம் கூட மெக்கானிக்கல் கணேஷ் லவ் லெட்டர் கொடுத்தான் தெரியுமா ? யப்பா !....... கண்ணே ! மணியேன்னு! இன்னும் 1947 லயே இருக்கான் !'
' நீ ஏன் கோவப்படுற ? அவனுக்கு அவ்வளவு தான் ரசனை ! போயும் போயும் உனக்குப் போய் லெட்டர் கொடுத்துருக்கான் ! இதுல இருந்தே தெரியல ?'
'பொறுக்கி ! போயிட்டு வா ஒனக்கு இருக்கு! தண்ணி அடிச்சன்னு தெரிஞ்சது கொன்னுட்டேன் !'
-----
தீபக் அங்கு இருந்து என்னுடன் அடிக்கடி பேசிக்கொண்டு இருந்தான் ! அவன் திரும்பி வந்ததும் தான் எங்கள் இருவருக்கும் பிரச்சனை துவங்கியது ! வந்த முதல் நாளே நேராக பிரபுவை பார்க்க சென்று விட்டான் !
'வந்தவுடனே அவனைத் தான் பாக்கப் போகணுமா?'
'இப்போ என்ன உன் பிரச்சன? '
'ரெண்டு மாசமா ஒன்னப்பாக்காம நான் ஒருத்தி இங்க இருக்கேன் ! அவனோட ஒனக்கு என்ன வேல ? வந்தவுடனே குடிச்சு கூத்தடிக்கணும்! '
'சும்மா ! மெண்டல் மாதிரி பேசாதடி ! அவன் அண்ணனுக்கு ஆக்சிடண்ட் ஆயிடுச்சு அங்க தான் போயிட்டு வரேன் !'
'சும்மா கதை விடாத ! அவுங்க அண்ணன என்ன 'சியர்ஸ்' பார்லய அட்மிட் பண்ணி இருக்காங்க ? '
'என்ன சியர்ஸ் பார் ?'
'நானும் , கல்பனாவும் டி நகர் வந்தோம் ! ஒங்க ரெண்டு மூஞ்சிங்களையும் தான் அங்க பாத்தேனே !'
'பாத்துட்டியா ?'
' உண்மை பேசுற மாதிரியே பொய் சொல்ற ? ஒன்ன எல்லாம் எப்படி நம்புறது ? பிராடு !'
'சும்மா பீர் தாண்டி! ஓவரா ஸீன் போடாத ! '
'எங்க ஊது பாப்போம் !'
'பீருக்கும், ஹாட்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க ஒனக்கு எப்படி தெரியும் ? ம்ம்ம் எல்லாம் கலிகாலம்! '
'பொறுக்கி ! போதைல ஒளராம ஒழுங்கா வீட்டுக்குப் போ !'
-----
அடுத்த சனிக்கிழமை,
'டேய் ! படத்துக்கு டிக்கட் புக் பண்ணிட்டேன் !'
'அப்படியா ?'
'ஆமா 6 .30 க்கு ஷோ! நான் சிக்ஸ்கு அங்க வந்துருவேன் ! ஓகே யா ?'
'ஓகே ! ஓகே !'
ஆறு மணிக்கு திரையரங்கத்திற்கு சென்று விட்டேன் ! அவன் வரவில்லை ! கைப்பேசியில் அழைத்தேன் எடுக்கவில்லை ! திரைப்படம் துவங்குவதற்குள்ளாவது வந்துவிடுவான் என நினைத்தேன் ! வரவில்லை ! மறுபடியும் கைப்பேசியில் அழைத்தேன் ! எடுக்கவில்லை ! எரிச்சலுடன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அவன் அறைக்குச் சென்றேன் ! அங்கு அவன் நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தான் !
என்னைப் பார்த்தவுடன் நெற்றியில் கைவைத்தபடி வந்தான் !
'சாரி ! சாரி ! '
கடும் கோபத்துடன் , 'என்ன வரசொல்லிட்டு இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?'
'மறந்துட்டேன் ! சாரி !'
'மறந்துட்டியா ?'
'சாரி ! சாரி ! மத்தியானம் ரூம்ல சின்ன ட்ரீட்! அந்த டயர்டுல............'
'மத்யானமே குடிச்சுட்டு என்ன ஒரு கொண்டாட்டம் ! நான் தேட்டர் வாசல்ல பைத்தியக்காரி மாதிரி நின்னுகிட்டு இருக்கேன் ! ஒனக்கு என்னைப்பத்தின நெனப்பே வரல !'
'ஹேமா !.......... சாரி ! இந்த ஒரு தடவ மன்னிச்சுடு !'
அதற்குப்பிறகு அவன் நண்பர்களைப் பற்றி நான் கோபமாக பேச, அவனும் கோபம் வந்து என்னை அறையை விட்டு வெளியேறச் சொன்னான் !
'அவ்ளோ தான் ! இனி ஒனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் கெடயாது ! ' என வெளியே வந்தேன் !
'ரொம்ப சந்தோசம்டி ! எப்ப பாத்தாலும் அதப் பண்ணாத ! இதப் பண்ணாதன்னு ! இனிமே நான் நிம்மதியா இருப்பேன் ! ' என அவன் கத்துவது கேட்டது ! அதற்குப்பிறகு நான் வீட்டிற்குப்போய் விட்டேன் ! அன்று அமெரிக்காவில் இருந்து வந்ததும் அவர்களைப் பார்க்கப்போய்விட்டான் ! இன்றும் அப்படித்தான் ! என் காதலுக்கு அவன் முக்கியத்துவமே கொடுக்கவில்லை! ஒவ்வொரு முறையும் இதுதான் நடக்கிறது ! ஆரம்பம் முதலே நான் தான் அவன் பின்னால் சென்று கொண்டு இருக்கிறேன்! என் காதலை புரிந்து கொள்ள முடியாதவனுடன் இனி எனக்கு என்ன உறவு ?
-----
அடுத்தநாள் காலை ,
தீபக்கின் அறையில் அவன் மட்டும் இருக்க கதவை தட்டுகிறாள் ஹேமா !
'வாடி செல்லம்! கோபம் எல்லாம் போயிடுச்சா? இந்த சண்டே புல்லா ஒனக்குதான்! வேற யாருக்கும் எடம் கெடயாது ! '
'இந்தா !' என ஒரு ட்ராவல் பேக்கை எடுத்து நீட்டுகிறாள் !
'என்ன வீட்ட விட்டு ஓடி வந்துட்டியா ? ஒங்க அப்பா தான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாரே?'
'நீ எனக்காக வாங்கி கொடுத்தது எல்லாம் இதுல இருக்கு ! இனி ஒனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ! அத சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன் !'
தீபக் அதை எடுத்து பார்த்து விட்டு ,
அமைதியாக , 'செயின் ஒண்ணு வாங்கி கொடுத்தேனே அதக் காணோம் ? ம்ம்ம்ம் கிராம் ரெண்டாயிரம் ரூபான்னு அத மட்டும் வெச்சுக்கிட்டியாக்கும்?' என சிரிக்கிறான் !
ஹேமா தீபக்கின் மீது பாய்கிறாள் !
'நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் ? செயினா தேடுற நீ ! ' என அவன் மார்பில் இரு கைகளாலும் குத்துகிறாள் ! பிறகு கட்டிப்பிடிக்கிறாள் !
'செயின திருப்பிக் கேட்டதும் கட்டிப்பிடிச்சுட்டாப்பா !' என அவளை அணைக்கிறான் !
'நீ என்னமும் பண்ணித்தொல! இனிமே நான் கவலைப்படப் போறதில்ல ! '
'ஓகே ! இனிமே சரக்கு அடிக்கல ! போதுமா? என் பிரெண்ட்ஸ் கூட எதுக்கு போட்டி போடுற நீ ? வாழ்க்க புல்லா நான் உன் கூடதான இருக்க போறேன் ! பின்ன ஏன் பயப்படுற ? '
' எனக்கு தெரியல ! ஒன்ன ஒரு வழி பண்ணலாம்னு தான் வந்தேன் ! ஆனா ஒன்னப் பாத்தா என்னமோ தெரியல ! விழுந்துடுறேன் ! '
'நானும் தான்!' என அவளை இழுத்து இதழோடு இதழை இறுக்கமாக பதிக்கிறான் !
இரண்டு நிமிடம் கழித்து அவனை உதறியபடியே ,
'சனியனே ! காலங்காத்தால பல்லு தேய்க்காம ....கருமம் !'
-----
ஆழமான புரிதலோ , நிபந்தனையற்ற அன்போ இல்லாமல் , கைப்பேசி சண்டைகள் , இருசக்கரவாகன உலா , குளிரூட்டப்பட்ட திரையரங்கு , ஒதுக்குப்புற உரசல்கள் என இருப்பது எப்போதுமே காதல் ஆகாது ! காதல் என்பது ஒருவரை , எந்த மாற்றமும் இன்றி அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்வது .இதை நாங்கள் இறுதியாக புரிந்து கொண்டதால் தான் நாங்கள் செய்தது காதலாகியது ! இல்லையேல் அது, பாலியல் வறட்சியை தீர்த்துக் கொள்ள நாங்கள் நடத்திய நாடகமாய் இருந்திருக்கும் !

7 comments:
Message Kalakkal... Nalla irunthathu...
I read the story “Comedy & Romantic Love story”
Really super.
I wish u the story will happen to your life.
Hey Vinoth,
Really Owesome! Before oftenly i receive your stroies, but i didn't record my view. But this story is good.
I like your way. your thoughts always be appreciative. i am proudly share your block with my friends....
hi anna
really story superb anna adhum kadisila neenga solirundheenga parunga msg extraordinary anna really fantastic anna
but recent trend vera mathiri poitu iruku anna really hats off u anna kadhila super romance konja edathulavandhalum summa superaa solirundheenga anna apram ponunga naturum nala solirundheanga anna FANTASTIC STORY
epovum frst readpaniruvaen enala read panamudiyamaponadhuku main reason hell mepco sry anna
Nice Story Vinoth!! But ponnu and paiyan character than konjam idichichu
Dai romance nalla varuthu unakku....not in real life only in stories.....but u r writing like an experienced guy in love...yaaruku theriyum....intha blog padichutu kuda unakku set akalam...but athellam nadakathu.. nadakavum vida mattom
by Un Uyir Nanban
நான் பதிவு செய்ய நினைத்த கமெண்ட் ஐ என் நண்பன் மன்மதன் பதிவு செய்து விட்டான்....
எப்படி நண்பா ஒரே மாதிரி நினைக்கிறோம்...
கருத்துரையிடுக