19 January, 2011

துரோகமும் பாசமும் - சிறுகதை

துரோகம் :
இந்த உலகம் வஞ்சகமும் , துரோகமும் நிறைந்தது !
நான் கல்பனா ! ரகுவைக் காதலித்ததை தவிர வாழ்க்கையில் நான்  எந்தத் தவறும் செய்யவில்லை ! அப்போது  நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தோம்! என்னுடன் படித்தது ஐம்பது மாணவர்கள் ! அதில் அவன் மட்டும் அதிசயமாய் தெரிந்தான் ! அவனாகத்தான் என்னுடன் பேசத்துவங்கினான் ! மெதுமெதுவாக கைப்பேசியில் தினமும் உரையாட ஆரம்பித்தோம் ! கல்லூரியில் இருந்து சுற்றுலாவுக்கு சென்றபோது   மனதளவில் நெருங்கினோம் ! சுற்றுலாக்களின் போது தான் பலர் காதல்வயப்படுவர்! நான் படிப்பை முடித்து கல்லூரியை விட்டு வெளியே வந்து  நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ! ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த காதல் விளையாட்டுக்களை இப்போது தான் புரிந்து கொண்டது போலத் தெரிகிறது ! சுற்றுலாக்கள் செல்ல தடை விதித்து விட்டார்களாம் !
கல்லூரி இறுதி ஆண்டின் துவக்கத்திலேயே எனக்கும் , ரகுவுக்கும் வேலை கிடைத்து விட்டது ! இரண்டு, மூன்று வருடங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என திட்டம் எல்லாம் தீட்டினோம் ! பின் ஒருநாள் உடலளவிலும் ஒன்றானோம் ! அந்த கணம் கூட எனக்கு நினைவிருக்கிறது ! தேன் நிலவுக்கு எங்கு செல்லலாம்? திருமணத்திற்கு பிறகு என்ன செய்யலாம் ? என இனிக்க இனிக்க பேசினான் ! அது தற்செயலாக நடந்த புணர்ச்சி என்று தான் நான் நினைத்திருந்தேன் ! அடுத்தநாள், மாத்திரைகளை அவன் வாங்கித் தந்தபோது கூட அவன் கண்களில் காதல் இருந்ததாக நம்பினேன் ! எல்லாம் கல்லூரி முடியும்வரை தான் ! நிதானமாக ஒருநாள் , அவன் தந்தை காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார் என எளிதாக என்னை உதறிவிட்டு சென்றுவிட்டான் !  கெஞ்சியோ , போராடியோ அவனை  அடைய எனக்கு மனமில்லை ! என் காதலை அவன் தூக்கி எறிந்து போன போதே நான் இதயம் நொறுங்கிப்போன நடைபிணமாய் ஆனேன் ! காதலுக்காக வீரர்கள் போல நாடகம் ஆட இந்த ஆண்கள் தயங்க மாட்டார்கள் ! ஒரு கோழையின் காதலுக்கு பலியான போதே , அவன் சட்டையைப் பிடித்து 'என் பெண்மையை ருசிக்க மட்டும் உன் அப்பன் சம்மதம் கொடுத்தானா பைத்தியக்காரா !' என் கேட்கத் தோன்றியது ! நான் தான் பைத்தியக்காரி என்பதை  உணர்ந்து அமைதியானேன் !

பாசம் :
நான் இன்னும் உயிருடன் இருப்பதற்கு காரணம் என் ஒரே உறவு அம்மா !  இதுவரை எனக்காக வாழ்ந்த அவளுக்காக இனிமேல் நான் வாழ வேண்டும் ! இந்த எண்ணம் தான், வாங்கி வைத்திருந்த தூக்கமாத்திரைகளை சாக்கடையில் போட வைத்தது !  எனக்கு திருமணம் செய்து வைப்பது மட்டும் தான் என் அம்மாவின் ஒரே லட்சியம் ! ஆனால் , எனக்கு நடந்ததை சொன்னால் , எவன் என்னை ஏற்றுக் கொள்வான் ? அப்படிப்பட்ட ஆண்கள் இருக்கிறார்களா என்ன ?  அப்படியே இருந்தாலும் அவர்களிடம் போய் என் கதையை சொல்லிக் கொண்டு நிற்கவும் எனக்கு விருப்பம் இல்லை ! யாரையாவது   ஏமாற்றி மணம் முடித்தால் எனக்கும் ரகுவுக்கும் என்ன வித்தியாசம்?

சமீபத்தில் தான் எங்கள் அலுவலகத்திற்கு அருண் வந்து சேர்ந்தான் ! அனைத்து ஆண்களையும் தவிர்ப்பது போல அவனையும் தவிர்த்தேன் ! ஆனால் ஒரு நல்ல நண்பனாக அவன் என்னுள் ஊடுருவ  ஆரம்பித்தான் ! ஆனால் அதற்கு அவனுக்கு இரண்டு வருடங்கள் பிடித்தது !

இரண்டு வருடங்கள் கழித்து ,
' உங்க அம்மா சமையல் சூப்பர் !'அருண்
 'அப்டியா !'
' ஆனா ......'
'என்ன ஆனா ?'
'நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது ? அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்க !'
'எனக்குப் பிடிக்கல ! உங்க மேல நம்பிக்கை இல்ல !'
'என்ன ?'
'ஓ ! சாரி ! உன்ன சொல்லல ! எல்லா பசங்களையும் சொன்னேன் !'
'ஒனக்கு என்ன பிரச்சன ?'
'அருண் ஒனக்கே தெரியும் ! நான் எந்த பசங்க கூடயும் பேச மாட்டேன்னு !  அந்த லிஸ்ட்ல நீயும் சேரணுமா ?'
'ஐயோ ! வேணாம் ! வேணாம் ! ஒன்னே ஒண்ணு  மட்டும் பண்ணு ! என்ன கல்யாணம் மட்டும் பண்ணிக்கோ !'
' ஓ ! இது எப்ப இருந்து ?'
' கொஞ்ச நாளா தான் !'
' ம்ம் ! சார் எதுக்கு என்ன காதலிக்கிறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ?'
' ம்ம்ம்ம் அது . ...........ம்ம்ம்ம்ம்ம்ம்'
' என்ன இவ்வளவு யோசனை?'
' யோசனை எல்லாம் இல்ல கல்பனா ! உன்னோட அழகு தான் ! உன்னோட மூக்குதான் !' 'எது ? இந்த ஜலதோஷம் வந்த மூக்கா ? ஹா ஹா !'
' ம்ம் !'
'இனிமே நீயும் என்கூட பேசாத !'
அடுத்தநாள் ,
' கல்பனா ! கல்பனா ! இப்படி திரும்பி கூட பாக்காம போனா என்ன அர்த்தம் ?'
' ஒனக்கும் , எனக்கும் என்ன இருக்கு ? இனிமே என்ன தொந்தரவு பண்ணாத !'
'நேத்து நீ கேட்ட கேள்விக்கு நான் இப்போ பதில் சொல்றேன் !'
' என்ன ?'
'உன்கிட்ட என்ன பிடிச்சதுன்னு !'
'ஓ ! நீ என்ன சொன்னாலும் அத கேக்க நான் தயாரா இல்ல !.......'
'நேர்மை !'
'என்ன ?'
 'எனக்கு எல்லாம் தெரியும் ! அம்மா எல்லாம் சொல்லிட்டாங்க ! ஒன்ன விட சொக்கத்தங்கம் எனக்கு வேற எங்கயும் கெடைக்காது !'
கண்களை நீர் நனைக்க அருண் மங்கலாகத் தெரிந்தான் !
-----
திருமணத்திற்குப் பிறகு  ,
இந்த உலகம் வஞ்சகமும் , துரோகமும் நிறைந்தது ! இது ரகுவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட அரைகுறைப்பாடம் ! அருணிடம் இருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் தெரியுமா ? இந்த உலகம் வஞ்சகமும் , துரோகமும் நிறைந்தது ! உண்மை தான் ! ஆனால் இங்கு அதைவிட அதிகமாய் பாசமும் , நேசமும், நேர்மையும்  இருக்கிறது ! நாம் தான் அதை கண்டு கொள்வதில்லை !

9 comments:

Ishu mad on blue சொன்னது…

anna valakam pola kalakeeteenga but epovum irukura romance vida idhula konjam sentiment jasthi anna superb anna nala vidhyasam solirundheenga throhathukum pasathukum anna semma anna really great anna keep on dng this SUPERB ANNA

selvi சொன்னது…

hi
asusual indha kadhaiyum nala iruku unmaiya solapona romba feelingsaaa irunadhu super awesome

Brindha சொன்னது…

hi
i am ishu's frnd anna.....kadha unmailyae romba fantasticaa irundahdu enoda luv succees anadhuku apram en kadhaya ungalta soluraen pls ahayum neenga blogla podunga anna really gud story

ram சொன்னது…

Mmmm nalla irukku.. Fans Athigamaagittanga pola...

Manmathan சொன்னது…

Dai Engayo kelvi patta mathiri irukku....Its remembering me some of the characters....

Then Vasakikal count increase ayittu irukku pola...Kali Ulagamada:):)

bala சொன்னது…

அன்புள்ள மாப்ள
மொதல்ல ரொம்ப சாரி ....உங்களோட மூணாறு வரமுடியாம போச்சு ...சுரேஷ் பாபு சொன்னான் ....
அபாரம் உங்க கதை...
மாப்ள நீ தப்பா நெனசுகத்தே ....எல்லா பொண்ணுங்களுக்கும் வர infactuation stage ....
அவங்களுக்கு கொஞ்சம் அதிகமா அன்பும் ,பாசமும் தேவை படுது....
இந்த stage ல தான் close friends,love எல்லாம் தெரியும் ...
ஆனா ஒரு சில பசங்க தப்பா use pannikuraanga ....
சில பொண்ணுங்க கிட்ட அன்பா சொல்லலாம் ,அதட்டி சொல்லலாம் ...
.சில பொண்ணுங்க என்ன சொன்னாலும் கேக்காதுங்க....நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு நு கத்துவலுக....
பட்டா தான் திருந்துவாலுக ....
ரொம்ப தெரிஞ்ச பொண்ண இருந்தா அவ பேசாம அவ போக்கு போகட்டும் நு விடவும் முடியாது ....
பக்குவமா தான் சொல்லணும்...
கதை நல்லா இருக்கு மாப்ள...
படிக்கும் பொது நம்மளோட காலேஜ் தான் ஞாபகத்துக்கு வருது ...
நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் u ஸ்ட்ரிக்ட் u நு சொல்லியே நாசம் ஆகிடுறாங்க ....
Thz for rewinding me our thoughts...
என்றும் அன்புடன்
L .V .பாலாஜி

9942684000

KumaraRagavan சொன்னது…

Hi VinothBabu,

Story super .. try publishing it in anandha vigadan or kumudham.

We are starving for good stories :) Keep writing

Bhakiyaraj சொன்னது…

Boss this story is tooooooo goood.
Write something like "Never Let Me go"
Watch this film ....
One of the ultimate movie i watched recently..
Just check the actress "carry mulligan" acting..ultimate..

Sathees Kannan சொன்னது…

vinoth.,
story is very nice da.. the dialogues seem so realistic.. i could see the same kind of dialogues in most of your short stories.. I guess, you would have had a similar experience in your college life or later...
do write often :)