13 December, 2010

கண்கள் - சிறுகதை

காதல் என்னும் மந்திரத்திற்கு மிகவும் முக்கியம் கண்கள் ! அப்படி என்றால் கண்கள் இல்லாதவர்கள் செய்யும் காதல் ? அது புனிதத்தின் உச்சம் ! பெண்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது கவனித்து இருக்கிறீர்களா ? அது என்னவென்று  சொல்கிறேன் ! இதுவரை  கவனித்தது இல்லை என்றால் இதை படித்து முடித்துவிட்டு நீங்களே சோதனை செய்து பாருங்கள் ! அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தாலும் , அவர்களை எங்கோ இருந்து ஏதாவது கண்கள் பார்க்கின்றன என்றால் அதை கண்டுபிடித்து விடுவார்கள் ! நாம் பார்ப்பது இருக்கட்டும் ஒருமுறை அவர்கள் நம்மை கண்ணுக்கு கண்ணாக பார்த்துவிட்டால் நம் நெஞ்சம் எப்படி எல்லாம் அலைபாயும் ? காதலை தொழிலென கொண்டால் கண்கள் தான் முக்கியமான மூலதனம் ! கனிவு , காதல் , காமம், வன்மம் , சோகம்  என கண்கள் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ! ஒருமுறை திரைப்பட விமர்சனத்தில் இப்படி எழுதி இருந்தார்கள் 'இந்தப்பாடல் காட்சியில் கதாநாயகியின் கண்களில் காமம் கொப்பளிக்கிறது ! எப்படித்தான் சென்சார் போர்டு இதை அனுமதித்ததோ  !'. கதாபாத்திரங்களுக்கு கோபம் வந்ததை வெளிப்படுத்த எழுத்தாளர்களும் 'எரித்து விடுவதைப் போல பார்த்தான் !' என்பார்கள் . சின்ன வயதில் ஏதேனும் பொருள் வேண்டும் என்றால் அழுது கண்களில் நீரை வரவழைத்தால் போதும் ! மனிதர்களுக்கு நடுவே உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்த ஒரு கண்ணை மட்டும் மென்மையாக சிமிட்டிக் காட்டுவது உண்டு ! இதையே சிலர் பருவத்தில் பெண்களிடம் செய்வதும் உண்டு ! என் பெரியப்பா சொல்லியது நினைவுக்கு வருகிறது!
'ரகு ! கிராமத்துல திருவிழாவுக்கு வந்தா எதுக்க வர்ர பொண்ணுங்கள பாத்து கண் அடிக்கணும்டா !'
'அப்டி அடிச்சா அவுங்க வீட்டுக்காரய்ங்க நம்மள அடிக்க மாட்டாய்ங்க?'
'அப்டி எவனும் கேட்டா நான் கண் அடிச்சது அவளுக்கு எப்டிடா தெரியும்?  அவ ஏன் என்னப் பாக்குறா ? அப்படீன்னு திருப்பிக்கேக்கணும் !'
'வயசுல இது மாதிரி ரொம்ப கேட்டு இருப்பீங்க போல !'
இது எல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ 'இவர்களை நிமிர்ந்து பார்ப்பதே வம்பு!' என  சில பெண்கள் எப்போதும் தலைகுனிந்தே செல்கிறார்கள் . ஆனால்  தலைநிமிர்ந்து செல்பவர்களை விட தலை குனிந்து செல்பவர்களை எளிதில் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என மாடசாமி சொல்லுவான் . எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருக்கும் மன்மதன் மாடசாமி ,   தலை குனிந்து செல்லும் தாமரையை  விட வாயாடி வனிதாவை மடக்கத்தான் மிகவும் சிரமப்பட்டான். பல கண்களை நிமிர்ந்து பார்த்து பழக்கப்பட்ட கண்கள் , கபடமுள்ள கண்களை எளிதில் கண்டுகொள்ளும் . உளவியல் நிபுணர்கள்  அடிக்கடி சொல்வார்கள் ' தீய எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டு பேசும் ஆண்களை பெண்கள் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் !' என்று . எனக்கு என்னவோ இந்தக் கூற்றில் நம்பிக்கை இல்லை ஏனென்றால் எவனையாவது நம்பி வயிற்றை நிரப்பிக்கொண்டு நடுத்தெருவில் நிற்பதும் அவர்கள் தான் .

கண்கள் பல விதமாய்  இருக்கும் ; கறுப்புக்கண்கள் , பழுப்புக்கண்கள் , பச்சைக்கண்கள், நீலக்கண்கள் , பூனைக்கண்கள் . தான் இவ்வளவு புகழ் பெற்றதற்கு தன்னுடைய கண்கள் தான் காரணம் என நம்புகிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன் . கண்களுக்கு அழகைக் கொடுப்பதில் புருவத்திற்கும் முக்கியபங்கு இருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு முடியாக நூல் கட்டி இழுத்துக் கொண்டும்  விதவிதமாய் மை இட்டுக்கொண்டும்  இருக்கிறார்கள் பெண்கள் . சரி இத்தோடு முடித்துக்கொள்வோம் இது சிறுகதை மாதிரி போகவில்லை . கண்களைப் பற்றிய கட்டுரை போல இருக்கிறது. கல்பனாவிற்கு தான் உலகிலேயே அழகான கண்கள் என்று நினைக்கிறேன் .தயவு செய்து 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்பதை போல இதை எடுத்துக்கொள்ள வேண்டாம் . அவள் கண்கள் ஐஸ்வர்யா ராயின் கண்களை விட அழகாக இருக்கும் . என்னடா எதற்கு எடுத்தாலும் ஐஸ்வர்யா அத்தையையே வம்புக்கு இழுக்கிறானே என நினைக்காதீர்கள் ! இந்திய அளவில் உதாரணத்திற்கு அவரை அளவுகோலாக எடுப்பது தானே நம் வழக்கம் ! கல்பனா உண்மையிலேயே அவ்வளவு அழகு . சராசரிக்கும் கொஞ்சம் கூடுதலான கறுப்பு நிறம் ம்ம்ம் ஆஆ ம்ம்  ம் நந்திதாதாஸ் மாதிரி இருப்பாள் என்று வைத்துக் கொள்ளலாம் . கறுப்பான  கதாநாயகியை உதாரணமாக சொல்ல எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கிறது ? சிவப்பு தான் அழகு என்று எந்தக் கிறுக்கன் சொன்னான் என்று தெரியவில்லை .எல்லாத் திரைப்படங்களிலும் சிவப்பான கதாநாயகிகளை நடிக்க வைத்தே உயிரை வாங்குகின்றனர் . இதில் 'சுண்டினால் ரத்தம் வரவேண்டும்' என பெண் பார்க்கும் போது நிபந்தனை வேறு ! சுண்டினால் ரத்தம் வரும் பெண்ணை வைத்துக் கொண்டு  எப்படி குடும்பம் நடத்த முடியும் ?  

கல்பனா என்னுடன் தான் அலுவலகத்தில் பணிபுரிகிறாள் . நான் எப்போதும் பெண்களிடம் பேசும் போது கண்களை பார்த்தே பேசுவேன் . ஏனென்றால் வேறு எங்காவது பார்த்து விட்டால் அது விவகாரத்தில் போய் முடிந்துவிடுமே ! கல்பனாவிடமும் அப்படித்தான் . நான் ஏற்கனவே சொன்னது போல அவள் கண்கள் அவ்வளவு அழகு ! பதில் சொல்லும்போது கூட சரி என்று சொல்லாமல் கண்களை சிமிட்டுவாள் . அவள் அந்த அலுவலகத்தில் வேறு ஆண்களுடன் பேசுவது கிடையாது . அப்படியே பேசினாலும் அது ஏதாவது கேள்வியாக இருக்கும் இல்லையென்றால்  அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக இருக்கும் . என்னிடம் மட்டும் தான் பலவற்றைப்பற்றியும் விவாதிப்பாள் . எனக்குப்பிடிக்கும் என்று வீட்டில் இருந்து வறுத்த மீனை கொண்டு வருவாள் . விஜய் படங்கள் என்றால் விரும்பிப்பார்ப்பாள். கிரிக்கெட் கூட பேசுவாள் . அவளுக்கு சுரேஷ் ரெய்னாவை பிடிக்கும். திடீரென்று ஒரு நாள் வந்து என்னை காதலிப்பதாக சொன்னாள் . நான் அவளிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை . எனக்கு எப்போதுமே காதலில் நம்பிக்கை இருந்தது இல்லை . அதற்காக நான் காதலில்  தோல்வி அடைந்தவன் என நினைத்து விட வேண்டாம் . என்னைப் பொறுத்தவரை  காதல் என்ற ஒன்று உலகத்திலேயே கிடையாது . அது வயசுக்கோளாறு , மனசுக்கோளாறு , ஹார்மோன் கோளாறு .அதையே அவளிடமும் சொன்னேன் . 'ஒரு நாள் முழுவதும் யோசித்துவிட்டு நாளை சொல்லுங்கள்!' என்றாள்.
'சொல்லுங்க ! என்ன முடிவு பண்ணி இருக்கீங்க ?'
'நான் தான் சொன்னேன்ல கல்பனா ! எனக்கு அப்படி எதுவும் தோணல !'
'ஒங்களுக்கு என்ன பிடிக்கலியா ?'
'ஒன்ன எனக்கு பிடிக்கும் கல்பனா ! ஆனா காதல் , கல்யாணம் இதெல்லாம் வேற ! நீ தப்பா எடுத்துக்காத !'
'உங்களுக்கு இஷ்டம் இல்லைனா விட்டுருங்க ! நீங்க சந்தோசமா இருந்தா அதுவே எனக்குப்  போதும் ! இனிமே உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன் !'
அவள் இதை சொல்லி விட்டு செல்லும் போது அவள் கண்ணெல்லாம் நீர் . அன்று முழுவதும் அவள் என் பக்கம் வரவே இல்லை . அந்தவாரம் முழுவதும் அப்படியே ! என்னுடன் சாப்பிட வரவில்லை ! பேச வரவில்லை ! என்னைப்  பார்க்கக் கூட இல்லை ! கண்ணெல்லாம் சோகம் ! அவள் என்னை  நெருங்காத  இந்த நாட்கள் எதையோ இழந்தது போன்ற உணர்வு! வீட்டுக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது எதையோ விட்டு விட்டுச் செல்வது போன்ற உணர்வு ! என் நண்பனிடம் இதையெல்லாம் சொன்னேன் !
'அட லூசுப்பயலே ! இதுக்கு பேரு தாண்டா லவ் !'

இதுதான் காதலா ? அவள் மீது எனக்கு இருக்கும் உணர்வு  தான் காதல் என நான் உணர்ந்த போது பரவசத்தில் நான் ஆகாயத்தில் பறந்தேன் ! வெண் மேகத்தின்  மீது அமர்ந்து தடைகளை எல்லாம் தாண்டி சொர்க்கத்திற்கு போவது  போல இருந்தது !
'கல்பனா ! என் கூட ஏன் பேச மாட்டேங்குற ?'
'நான் தான் என் மனசுல இருக்குறத எல்லாம் சொல்லி உங்கள் கஷ்டப்படுத்தீட்டேன்! நான் உங்க கிட்ட பேசுனா உங்களுக்கு தான் சங்கடமா இருக்கும் !'
'ம்ம் ஹ்ம்ம்ம் !'
'சொல்லுங்க ! என்ன விஷயம் ?'
'கல்பனா எனக்கு உன்னோட ரெண்டு கண்ணும் ரொம்ப பிடிக்கும் ! எந்த பீலிங்க எக்ஸ்பிரஸ் பண்ணும் போதும் உன் கண் அழகா இருக்கும்! நீ அழும் போது உன் கண் எவ்வளவு அழகா இருக்கும்ணு பாக்குறதுக்காக தான் நான் உன்ன லவ்  பண்ணலன்னு சொன்னேன் !'
முகமெல்லாம் பரவசத்துடன் 'உண்மையாவா ?'
'ஆமா ! சும்மா சொல்லக்கூடாது ! சோகத்துல கூட உன் கண் அவ்வளவு அழகா இருக்கு ! என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ?'
மெல்லிய சிரிப்புடன் , ஆனந்தக் கண்ணீருடன் கண்களை சிமிட்டினாள் .
அன்று மதியம் ,
'போன வாரம் நீ என் கூட பேசலையா ! வறுத்த  மீனை நான் மிஸ் பண்ணிட்டேன் !'
'ஹா ஹா நான் உங்க கிட்ட அன்னிக்கு பேசுனப்பவே நீங்க லவ் பண்ணுறத சொல்லி இருந்தா எல்லா நாளும் மீனா கொண்டு வந்து இருப்பேன் ! அழவச்சு  பாக்கணும்னு இப்படி பண்ணீட்டீங்க ! எல்லாம் சரி ! அழுதா தான் நான் அழகா இருக்குறேன்னு சொல்லி  என்ன அடிக்கடி அழ வைக்காதீங்க !'
-----
ஐம்பது வருடங்கள் கழித்து ,
கல்பனாவை விட்டு விட்டு இறந்து போகிறான் ரகு  .
ரகு  இதுவரை பாதுகாத்து வைத்த நாட்குறிப்புகளை எடுத்துப் பார்க்கிறாள் கல்பனா .

இன்று நான் கல்பனாவிடம் என் காதலை சொல்லப் போகிறேன் ! உண்மையில் அவள் மீது எனக்குக்  காதல் பல நாட்களாக இருந்திருக்கிறது ! அவள் என்னுடன் பேசாத இந்த ஒரு வாரத்தில் தான் நான் அதை உணர்ந்தேன் ! அவள் கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ! அந்தக்கண்கள் காதல் வலியில் சில நாட்களாக வாடிப் போய் இருந்தன . சோகமான அந்தக்கண்கள் எனக்குக்  கொஞ்சம் கூட பிடிக்கவில்லை . இன்று நான் உறுதி ஏற்கிறேன் அவள் வாழ்க்கையில் இனி எந்நாளும்  கண்ணீர் சிந்தக்கூடாது ! கனிவைப் பொழியும் அந்தக் கண்கள் எப்போதும் கலங்காமல் இருக்க வேண்டும்! அப்படி ஒரு வாழ்க்கையை அவளுக்கு அளிக்க வேண்டும் !.........................
படித்து முடித்ததும் கல்பனாவின் கண்களில் கண்ணீர் பொங்கியது ! சுவரில் மாட்டப்பட்டு இருந்த ரகுவின் புகைப்படத்தை பார்த்து ஆனந்தமாய் அழுதாள். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு அந்தக் கண்களில் இருந்து நீர் வழிந்தது .

7 comments:

Ishu mad on blue சொன்னது…

hi anna no wrds to say about ur story avalvu awesome nijama semma feel anna stroyla ungaloda ponuga pathi prediction right than anna but enna predictionu matum kekateenga boss adhu ponungaloda top secret :) to say frankly naanum indha eyes vachu niraya kashtapaturukaen naan vilundadhum eyesla dhan ponungalakumatum kanu alga irukadhu anna niraya pasangalukum kanu alaga dahn irukum anna sari inga en kadha edhuku anga anga emotiona aliveesirundheenga boss nala effect climax super nala deep heart feel anna HATS OFF !!!!!!!!!!!!!!!!!!!! brother really u r fantastic anna keep on dng this nice story

Saravanakumar சொன்னது…

Dear vinoth,

Last page is heart of the story...
The time when I felt this is story or essay, the next line you also wrote the same thing..

Manojkumar சொன்னது…

Hi da,



Story nalla irunthuchu. But Startingla konjam philosophy mathri therinthathu athai neeyae un kathaiyila sollita. Great work!!

ram சொன்னது…

so first climax eluthitta.. apram matthathellam develope panniya... mega serial episode mathiri vazha vazha kozha kozhannu irunthathu...
aana unnoda real life storyum mix pannirukka pola...
mm nadatthunga nadatthunga...

ram சொன்னது…

Appa nalla illanu comment podarathu evlo jolly'a irukku... ithu mathiri neraya eluthuvingala.. daily eluthuvingala...

selva சொன்னது…

Nalla eruku da...

Selvi சொன்னது…

hi
i am ishu's frnd
naan idhuvara ungalapathi ketadhu ila idhan frst time unga storya read panuraen i was totally flat on ur story really superb
no wrds
too expressive extremely well ini ctsaa unga story padipaen :)