'சந்தோஷ் சுப்ரமணியம்' திரைப்படம் வெளிவந்தபோது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால் இப்போது விடுமுறை நாட்களில் நானும் , திவ்யாவும் அதை ரசிப்பது உண்டு.ஏனென்றால் திரையில் இப்போது அந்த கதாநாயகிக்கு பதில் நான் என் திவ்யாவைத் தான் பார்க்கிறேன் . இன்று என் தந்தை என்னைப் பார்க்க சென்னைக்கு வருகிறார். அவசரமாக என் நண்பர்கள் அறைக்குச் சென்று கொண்டு இருக்கிறேன் . எதற்கு ? பார்க்கலாம் .
-----
இடம் : கணபதிராம் திரையரங்கம் , அடையார்
நாள் : சித்திரை 1 , தமிழ்ப்புத்தாண்டு 2008(நான் தி.மு.க காரன் இல்லை )
திரைப்படம் : சந்தோஷ் சுப்ரமணியம்
நான் : என்னடா ஸீன் இது? தலைல முட்டுனா கொம்பு முளைக்கும்னு ! கேனத்தனமா இருக்கு ! இதனால ஹீரோவுக்கு லவ் வேற வருதாம் !
அருண் : நீ இப்டியே பேசிக்கிட்டுத் திரி ! ஒனக்குத்தான் எதுவும் செட் ஆக மாட்டேங்குதுன்னா சினிமாவப் பாத்துட்டு ஏண்டா பொலம்புற ?
நான் : பொண்ணுங்க எல்லாம் இந்த ஹீரோயின் மாதிரியா இருக்காங்க ? எல்லாப் படமும் இதே மாதிரி தான் ! படம் எடுக்குறவங்க தான் ஸ்டீரியோடைப்னு நெனச்சா பாக்குற ஜனங்களும் அப்டி தான் இருக்குறாங்க !
அருண் : டேய் ! உனக்கு இப்ப என்ன பிரச்சன ? வேலை வெட்டி இல்லாத நாய் உன்ன ஓசில படம் பாக்க கூட்டிட்டு வந்தா ஓவரா பிலாசபி பேசுற !
நான் : இல்ல மச்சான் ! ........
அருண் : என்ன நொல்ல மச்சான் ? மூடிட்டு வாடா !
நான் : எதையாவது சொல்லி பெரிய ஆள் ஆயிடலாம்னு பாத்தா விட மாட்டீங்களே !
-----
இப்படி சென்று கொண்டு இருந்த என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வந்தது . எனக்கு வேலை கிடைத்தது. அது ஓர் சிறிய நிறுவனம். நிறுவனத்தில் அத்தனை அழகிகள் . திரைப்படங்களில் கூட இவ்வளவு அழகான பெண்களை நான் பார்த்தது இல்லை. ஆனால் யாரும் தனிக்கட்டை இல்லை . எல்லாரும் தனக்கென்று ஒரு துணையுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர் . முதல் நாளே என் நண்பன் கைப்பேசியில் என்னை அழைத்தான் .
அருண் : மச்சான் ! அங்க பிகருங்க எல்லாம் எப்படி ?
நான் : ஏன் என்ன பண்ணப் போற ?
அருண் : இல்ல எப்டி இருந்தாலும் நீ ஒண்ணும் பண்ண மாட்ட ! அதான் ஒன்ன வெச்சு நான் எதுனா பண்ணலாம்னு !
நான் : ஒனக்கு ஆபீஸ்ல வேற வேலை இல்லியா ?
அருண் : ரூம்ல தான் இருக்கேன் ! இனிதான் போகணும் ! ஆபீசா அது! எங்கிட்டு திரும்புனாலும் தாடியும், மீசையும் ஒரே கடுப்புடா! அதான் ஒனக்கு கூப்டேன் ! சரி எவளையாவது பிரெண்டாவாவது புடிச்சு வை ! எங்களுக்காவது பிரயோசனப்படும்ல!
நான் : டேய் அடங்குடா !
-----
இரண்டாம் நாள்-
புதிதாக பணியில் சேர்ந்தாள் திவ்யா . என்னுடைய குழுவிலேயே அவளை இணைத்து விட்டார்கள் . அவள் நடப்பது , பேசுவது, பழகுவது என எல்லாமே சிறு பிள்ளைத் தனமாக இருக்கும். எங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தது . ஏதாவது சந்தேகம் கேட்பாள் . நானும் பதில் சொல்வேன் .
திவ்யா :அந்த ட்ரெய்னர் ராட்சசிய பாத்தீங்களா ? நல்லா பூசணிக்காய்க்கு புடவை கட்டுன மாதிரி இருக்குறா !
நான் : சும்மா இருங்க! யாராச்சும் கேட்டுறப் போறாங்க !
திவ்யா :நீங்களும் என் செட்டு தான வா, போன்னே கூப்புடுங்க ! நீங்க அப்டி கூப்புடாட்டாலும் நான் இனிமே உங்கள ...சாரி ஒன்ன வா , போன்னு தான்
கூப்புடுவேன் !
நான் : சரி ! சரி !
திவ்யா : இங்க சாப்பாடு நல்லா இருக்குமா ?
நான் : நானே நேத்து தாங்க இங்க சேந்தேன்!
திவ்யா : மத்யானத்துக்கு கோழி கொழம்பு கெடைக்குமா ?
நான் (மனதில் ): இது என்ன சரியான தின்னிப்பண்டாரமா இருக்கு !
திவ்யா : சொல்லு கார்த்திக் ! கோழி கொழம்பு கெடைக்குமா ?
நான் : இங்க கெடைக்காதுங்க!
திவ்யா : அப்ப என்ன ஏதாவது நான் வெஜ் கடைக்கு கூட்டிட்டு போறியா ?
நான் : இன்னிக்கு லஞ்சுக்கா!
திவ்யா : ஆமா !
நான் : என்னங்க ? என்ன நீங்க பாத்தே ரெண்டு மணி நேரம் தான் இருக்கும் !அதுக்குள்ள என்ன நம்பி என் கூட வரேன்னு சொல்றீங்க ? மெட்ராஸ்ல இப்படி எல்லாம் இருக்காதீங்க !
திவ்யா : நம்ம டீம்ல உன்ன விட்டா யார் சும்மா இருக்கா ! எல்லாரும் யார் கூடயாவது போன்ல பேசிக்கிட்டு இருக்காங்க! அப்புறம் நீ என்ன என்னைய கடிச்சா தின்னுற போற ?
நான் சிரித்தபடியே சம்மதம் சொல்லி விட்டு வந்துவிட்டேன்.
அப்போதே அருணை கைப்பேசியில் அழைத்தேன் .
நான் : மச்சான் ! புதுசா ஒரு பொண்ணு எங்க கம்பெனில சேந்து இருக்குடா !
அருண் : ம்ம் !
நான் : அது இன்னிக்கு சாப்பாடுக்கு என்ன வெளியில கூட்டிட்டு போகச் சொல்லுதுடா !
அருண் : போ! அத விட ஒனக்கு என்ன புடுங்குற வேல ?
நான் : இல்ல .....
அருண் : ஏன் ? நீங்க அசினும் , அனுஷ்காவும் வந்தா தான் கூட்டிட்டு போவீங்களோ !
நான் : இல்ல மச்சான் கைல காசு இல்ல !
அருண் : ஒன்னும் பிரச்சன இல்ல மச்சான் ! நான் வேணா வந்து ...
நான் : ஆணிய புடுங்க வேணாம் ! ஒரு ஐநூறு ரூபா மட்டும் டக்குனு ட்ரான்ஸ்பர் பண்ணி விடு !
அருண் : மச்சான் ! சிக்னல் சரியா கெடைக்கலடா! டேய் ! டேய் !
நான் : சரி மச்சான் காசு கூட நான் இங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் !
அருண் : அப்டியா மச்சான் ! ஓகே மச்சான் !
நான் : நார வாயா ! இப்ப மட்டும் ஒனக்கு காது கேக்குமே ! மூடிட்டு காச அனுப்பி வை !
-----
அசைவ உணவகம்
திவ்யா : கார்த்திக் ! எனக்கு எக் பிரியாணி , செட்டி நாடு கோழிகொழம்பு! ஒனக்கு ?
நான் :எனக்கும் அதே !
திவ்யா : இல்ல நீ மட்டன் பிரியாணியும் காடை மசாலாவும் வாங்கு !
நான் : எதுக்கு ?
திவ்யா : அப்ப தான நான் அதையும் சாப்ட முடியும்!
எனக்கு முதல் தடவை சிரிப்பு வந்தது. அப்போது இருந்து தான் நான் திவ்யாவை ரசிக்க ஆரம்பித்தேன் என நினைக்கிறேன்.
திவ்யா : நீ எந்த ஊரு ?
நான் : திருச்சி!
திவ்யா : ஐயோ நானும் திருச்சி தான் ! அங்க எங்க ?
நான் :தில்லை நகர்!
அதைக் கேட்ட மறுநிமிடமே நறுக்கென்று கிள்ளினாள்.
திவ்யா : சேம் ஸ்வீட் ! நானும் தான் !
நான் 'ஆ' வென அலறினேன் .
சர்வர் : என்ன சார் ஆச்சு ?
நான் : ஒன்னும் இல்ல! கொசு கடிச்சுருச்சு !
சர்வர் : அதுக்கு எதுக்கு சார் நாய் கடிச்ச மாதிரி கத்துறீங்க ?
திவ்யா : ஹா ஹா ஹஹஅஹஹா
நான் : நீ இப்டி தான் எப்பவும் பேசிக்கிட்டு இருப்பியா ?
திவ்யா : ஆமா ! என் கூட இருக்குறவங்களுக்கு நான் ஸ்டாப் திண்டாட்டம் !
சர்வர் : சார் ! மட்டன் பிரியாணி ! எக் பிரியாணி ! செட்டிநாடு கோழிக்கொழம்பு ! காட மசாலா !
அனைத்தையும் இருவருக்கும் சரிபாதியாய் போட்டாள். அவித்த முட்டையின் மஞ்சள் கரு பிடிக்காது என சொல்லி எனக்குக் கொடுத்துவிட்டாள் .கோழிக்குழம்பில் காரம் போதவில்லை என சொல்லி மிளகுத்தூள் கேட்டாள்.
திவ்யா : அண்ணா ! பெப்பர் கொடுங்கண்ணா!
சர்வர் : இந்தாங்க மேடம் !
மிளகுத்தூளை தூவும் போது அந்த நெடியில் 'நச்' என தும்மினாள்.
திவ்யா : God Bless You ! ன்னு சொல்லு!
நான் : எதுக்கு ?
திவ்யா :சொல்லு !
நான் : God Bless You !
திவ்யா : Angel Kiss You !
நான் : என்னது ?
திவ்யா :எனக்கு தும்மல் வந்தா பக்கத்துல இருக்குறவங்கள God Bless You ன்னு சொல்லச் சொல்லுவேன் ! அதுக்கு பதிலா நான் Angel Kiss You ன்னு சொல்லுவேன் !
நான் : என்ன இது ஸ்கூல் புள்ளைங்க மாதிரி !
திவ்யா : இது என் ஸ்டைல் !
-----
இப்படி அவள் செய்வது எல்லாம் குழந்தைத்தனமாகவும் , குறும்புத்தனமாகவும் இருக்கும் .ஆறேழு மாதங்கள் கடந்தது . தலையில் முட்டினால் கொம்பு முளைக்கும் என திரைப்படத்தில் வந்த காட்சி எனக்குப் பிடிக்கவில்லை . ஆனால் சேம் ஸ்வீட் சொல்லி என்னைக் கிள்ளிவிட்டு , Angel Kiss You என ஒருத்தி என்னிடம் சொன்னபோது, அவள் மேல் எனக்குக் காதல் வந்தது. இப்போது புரிகிறதா ? எனக்கு ஏன் 'சந்தோஷ் சுப்ரமணியம்' பிடிக்கிறது என்று . பின்பு ஓர் நாள் அவளிடம் என் காதலை சொன்னேன் .
நான் : எனக்கு ஒன்ன ரொம்ப புடிச்சு இருக்கு ! நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா ?
திவ்யா : ம்ம் பண்ணிக்கலாம் !
நான் :என்ன நீ டக்குனு சம்மதம் சொல்லிட்ட ! நான் என்னவெல்லாம் பண்ணணுமோன்னு நெனச்சேன் ! நீயும் என்ன லவ் பண்றியா ?
திவ்யா :இல்லியே !
நான் :அப்புறம் ?
திவ்யா :நாம ரெண்டு பேரும் சேந்து இருந்தா நல்லா ஜாலியா இருக்கு ! அதான் ஓகே சொன்னேன் ! நான் எப்டியும் யாரயாச்சும் கல்யாணம் பண்ணுவேன் ! அது எனக்குப் பிடிச்ச ஆளா இருந்தா ஓகே தான ?
நான் : நீ தான் வாழ்க்கைல எனக்கு கெடச்ச பம்பர் ப்ரைஸ் !
-----
திவ்யாவுக்கு அம்மாவும் , தங்கையும் மட்டும் தான் . அவர் எங்கள் காதலை ஏற்றுக்கொண்டார் ! என் அப்பா என் முடிவிற்கு சம்மதித்து விடுவார் .ஆனால் என் அம்மா நிச்சயம் எங்கள் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார் . என் அம்மாவின் அண்ணன் மகளைத்தான் நான் மணக்க வேண்டும் என்பது அவர் விருப்பம் . மேலும் பல பிரச்சனைகள் . திவ்யாவின் தங்கைக்கு வேறு வரன்கள் வந்ததால் நான் திவ்யாவை உடனே திருமணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது . அதனால் நடப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து வீட்டிற்கு சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டேன் . இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வருகிறோம் . ஒரு வருடம் ஓடி விட்டது . என் குடும்பத்திற்கு தனியாக குடும்ப அட்டை கூட வாங்கி விட்டேன் . இன்று என் தந்தை என்னைப் பார்க்க சென்னை வருகிறார். அவசரமாக என் நண்பர்கள் அறைக்குச் சென்று கொண்டு இருக்கிறேன் .
-----
அருண் : என்னடா அப்பா வந்துட்டாரா ?
நான் : தாம்பரம் வந்துட்டார் ! இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவார் !
அருண் : அப்ப இன்னிக்கு எங்களுக்கு எல்லாம் நல்ல பொழுதுபோக்கு இருக்குது !
நான் : என் கஷ்டம் உனக்கு பொழுது போக்கா ?
அருண் : விடு மச்சான் பாத்துக்கலாம் !
நான் :அவர் கடைசியா வந்தப்ப நான் இங்க தான தங்கி இருந்தேன் ! அதையே இப்பவும் மெயின்டைன் பண்ணிக்குவோம் ! பாரு ! வீட்ல இருந்து என் திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துருக்கேன் !
அருண் : சரி ! மச்சான் கலக்கீருவோம்!
-----
ஒரு மணி நேரம் கழித்து என் அப்பா வந்தார் .
அப்பா : என்னப்பா ! அருண் , பிரவீன் எல்லாரும் நல்லா இருக்கீங்களா ?
அனைவரும் : நல்லா இருக்கோம்ப்பா!
அருண் :என்னப்பா திடீர்னு இங்க ?
அப்பா : என்ன பண்றது ? இவனுக்கு வேலை கெடச்சப்ப இங்க வந்தது! இவனும் ஒரு வருசமா வேல வேலன்னு தீபாவளி , பொங்கலுக்கு கூட வர மாட்டேங்குறான் ! அதான் நானே கெளம்பி வந்துட்டேன் ! நீங்க தான் இவனுக்கு எடுத்து சொல்லணும் !
அருண் : குடும்பத்தையும் கொஞ்சம் பாத்துக்கடா!
பிரவீன் : அதான் நல்லா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்ல !
அருண் சட்டென்று பிரவீன் காலை உதைக்கிறான் .
அப்பா : என்னது ?
அருண் : அது ஒன்னும் இல்லப்பா !
சிறிது நேரம் கழித்து,
அப்பா : ஆமா ! கார்த்திக்குக்கு வேலை கெடச்சப்ப ரூமுக்கு ஒரு பிரிட்ஜ் வாங்குனோமே அது எங்க ?
பிரவீன் : அதான் கார்த்திக் ரூம்ல இருக்குல்ல !
அப்பா :என்னப்பா உளர்ற ? இது தான கார்த்தியோட ரூம் !
அருண் : அதாம்ப்பா ! இங்க தான் இருக்குது அப்டீங்கிரத வித்யாசமா சொல்றான் !
பின்னர் அமைதியாக பிரவீனிடம் , ஓட்ட வாய வெச்சுக்கிட்டு ஒளறாதடா நாயே !
அப்பா : அது சேம்சங் பிரிட்ஜ் இல்ல! இங்க வீடியோகான் பிரிட்ஜ் இல்ல இருக்கு !
அருண் : கரெக்டுப்பா ! என்ன ஒரு நியாபக சக்தி! கலக்குறீங்க போங்க !
அப்பா : அதெல்லாம் சரி அந்த பிரிட்ஜ் எங்க ?
அருண் : அது......ஆங் .. சின்ன பிரச்சனை சர்வீசுக்கு கொடுத்து இருக்கோம் !
அப்பா : அப்பிடி தெளிவா சொல்லுங்க ! அதெல்லாம் சரி ! ஒரு ரூமுக்கு எதுக்கு ரெண்டு பிரிட்ஜ்?
நான் : அப்பா ! அத விடுங்கப்பா !
தற்செயலாக மேசையில் இருக்கும் கார்த்திக்கின் ஆவணங்களை பார்க்கிறார்.
அப்பா : எதுக்குடா இதெல்லாம் ?
நான் : புது பேன் கார்டு வாங்குரதுக்குப்பா !
அப்பா : ரேசன் கார்டு ஊர்ல இல்ல இருக்கு ! இது என்ன புது கார்டு ?
நான் :இது கலர் ஜெராக்ஸ்ப்பா!
அப்பா : அதை வெச்சு நீ எப்டி பேன் கார்டு வாங்குவ ? எங்க பாப்போம்!
நான் : வேணாம்ப்பா !
அப்பா : டேய் என்னடா இது என் போட்டோவுக்கு பதிலா உன்னோட போட்டோ இருக்கு !
அனைவரும் : அய்யய்யோ !
நான் : அது பிரெண்டோட கார்டுப்பா !
அப்பா: அப்புறம் கலர் ஜெராக்ஸ்ன்னு சொன்ன !
நான் :ஆமாம்பா ! அவன் பேரும் கார்த்திக் அதான் யூஸ் பண்ணிக்கலாம்னு வாங்குனேன் !
அப்பா : பிரெண்டோட கார்டுன்னா பேர் தான் ஒரே மாதிரி இருக்கும் ! மூஞ்சி எப்பிடி ஒரே மாதிரி இருக்கும் ? உன் போட்டோ இதுல எப்பிடி வந்தது ? ம்ம்ம் ......கார்த்திக் 24 , திவ்யா 24 ! யார்ரா அது திவ்யா ?
நான் : அப்பா!............
அப்பா: என்னப்பா நடக்குது அருண் ?
அப்பாவை உட்காரவைத்து பொறுமையாக விளக்கினோம் !
அப்பா : ஒன்னத்தெரியும்டா எனக்கு ! இப்படி எல்லாம் நீ பண்ணாட்டினா தான் ஆச்சர்யம் ! லவ் பண்ணுனவன் என்கிட்டே வந்து சொல்ல வேண்டியது தான ! இதுல என்ன இருக்கு ? நீ பொண்ண தான லவ் பண்ணுன ? பூதத்த லவ் பண்ணலியே ?
நான் : இல்ல அம்மாவை நெனச்சு கொஞ்சம் பயம் !
அப்பா : அதான் நான் இருக்கேன்ல ! நான் பாத்துக்க மாட்டேனா ?
நண்பர்களுடன் அப்பாவை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்குச் சென்றேன் .
நான் : இதுதாம்ப்பா திவ்யா !
திவ்யா : ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா !
திவ்யாவின் பேச்சை அவர் மிகவும் ரசித்தார் .சிறிது நேரம் கழித்து ,
அப்பா : நல்ல வேளை! எப்டியோ இப்பவே எனக்குத் தெரிஞ்சு போச்சு ! இல்லைனா இந்த பய கொழந்த பெத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான் சொல்லி இருப்பான்!
திவ்யா : மன்னிச்சுடுங்க மாமா ! உங்க பேத்தி ஸ்கூல் போயிருக்கா !
பிரவீன் : சொல்லவே இல்ல ! எப்டிடா ? ஒரே வருசத்துல ஸ்கூல் போகுற மாதிரி ? கின்னஸ் ரெகார்டு தான் போ !
அப்பா : டேய் ! இது வேறயா ?
நான் : அப்பா! கிண்டல் பண்றாப்பா அவ !
அப்பா : உன்ன மாதிரி ஒரு பொண்ணு எனக்கு இல்லியேன்னு ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன் ! இப்ப அந்தக் கொறையும் போயிடுச்சு ! ரொம்ப சந்தோசம்மா !
திவ்யா : அத்தைய நெனச்சா தான் எனக்கு பயமா இருக்கு மாமா !
அப்பா: அவளுக்கு ரொம்ப கொழந்த மனசு ! என்ன அவுங்க அண்ணன் பொண்ண இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டா ! ஒன்னும் பிரச்சன இல்ல நான் அவள பாத்துக்கறேன் !
பிறகு அப்பாவை ஊருக்கு அனுப்பி வைத்தேன் .
-----
இடம் : கார்த்திக்கின் வீடு , தில்லைநகர் , திருச்சி
நாள் : ஐப்பசி 19 , தீபாவளி 2010
ம்ம்.... அப்புறம் இந்த தீபாவளியை என் குடும்பம் , திவ்யா குடும்பம் என எல்லாரும் கொண்டாடினோம் . அம்மா என்னிடம் ஒன்று மட்டும் தான் சொன்னாள்.
'நீ என்கிட்ட கேட்டு இருந்தா நான் என்ன வேணாம்னா சொல்லப் போறேன் !'

11 comments:
hi anna
unga kadhaiya suda suda padicha effect super anna kadhaiya pathi solanumna WOWWWWWWWWWWWWWWWWWWWWWWW GR8 FEEL annna enaku divya voda char romba pidichurundahdu anna esp karthikaa kilura scenela serveroda timing comedy nice anna..... can feel nice cute luv anna.... apram andha god bless u angel kissu twistna massdhan ponga thanks anna.... apram ration card matunadhu nice konjam avasarapadama karthik lateaa ration card vangirukalam matirukamatan anyhow nice chance to understand parents indha trend parents pathi nala solirukeenga ealrum ipidiya eirundha nalairukum .......apram niraya idathula bala slang and u too use that andha ONUM PRACHANA ILLA NAANAPTHUKURAEN enaku romba pudichurundahdu anna apram climaxla tahala deepali celbrationum superbbb toatlly solanumnaaa gr8 job brother romba nice luv story AWESOMEEEEEEE!!!!!!!!!!!!!! THANKSSSSSSS
first time reading your story...usual story...nice timing comedy....i enjoyed it...keep writing :-)
dai mama storylam pattaya kelapputhu
vinoth'u kalakkita pa........
unnoda therami pongi valiyuthu pa..
congratulaion ...
Dai is it a imagination story or real story???? Enakuu ennamo doubt ah irukku.....Andipatti la ethuvum ration card vangittiyaa...Unmaya solluda...
Enjoyed the story lot da..keep rocking....
Dear Vinoth,
Its good.
I liked the following places.
1) I just stopped and started thinking at (naan thimuka karan illai)
2) the line "unga pethi schoolku poyirukka" from divya
3) fridge, ration card matter ellam venumne thinicha mathiri irukku.
dai aduthavan kadaya yelidiya polapa otura PiKaKo............
konjam yosichu yeduthu da.....
summa than sonna...
nice comedy story....
keep writing.....
nalla pagalndu irukan palkova vanga marakatha....
super machi.... Nammala pathi ooru story ealuthu da
Hi da,
Intha kathiaya engo kaetta mathiri irunthuchu. (Yaaroda Love Story J J)
Hi Boss,
Dhivya Karthik kadha palaya chennai kaadhal kadhai dhaan.onnum sorathe illa aana unga self story la unga pinnadi mynaakal mynaa padam paathanga nu sonningale..athula oru mynaa fone no forward pannunga boss.
அப்பாவ சமாளிக்கிற சீன்ல பஞ்சதந்திரம் படம் நினைவுக்கு வந்தது...... சுப்பர்... பின்னிடிங்க
கருத்துரையிடுக